பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 121 பெண்ணுரிமை பற்றி பெரிதாகப் பேசப்படும் இக்காலத்தில் சிலர் இவர்கள் இருவரும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர் என்று கூறுவார்களானால் அதில் வியப்பொன்றுமில்லை. இவ்வாறு கூறுகிறவர்கள் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஒருவருடைய உரிமை பறிக்கப்படுவது என்பது வேறு. அவர், தம்முடைய உரிமையை தாமே விட்டுக் கொடுப்பது என்பது வேறு. கண்ணகி அம்மையார் ஆகிய இருவரும் குடும்ப வாழ்க்கை அல்லாமல் வேறொரு குறிக்கோள் கொண்டிருந்தமையின் அக்குறிக்கோளுக்கு இழுக்கு வராத முறையில் தம் உரிமையைத் தாமே விட்டுக் கொடுத்து விட்டனர். குறிக்கோள் என்ற ஒன்று இல்லாதவர்களுக்கு உரிமைகள் என்று சொல்லப்படுபவை மிகப் பெரிதாகக் காட்சியளிக்கும். ஆனால் உயர்ந்த குறிக்கோளை வாழ்க்கையில் மேற்கொண்டவருக்கு அதுதவிர, எஞ்சிய அனைத்துமே பொருள் அற்றதாக அற்பமானதாக ஆகிவிடும். பக்கத்தில் பெரியகோடு வரையப்பட்டவுடன் முன்னர் பெரியது என்று நினைக்கப்பட்ட கோடு சிறியதாக ஆகிவிடுவது போல, குறிக்கோள் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உரிமைகள் என்பவை யெல்லாம் சிறியனவாக ஆகிவிடுகின்றன. கண்ணகியைப் பொறுத்தமட்டில் மதுரைக்கு வந்து, கணவனுக்கு உணவு சமைத்துப் போட்டு, சிலம்பை விற்கப் புறப்படுகின்ற வினாடிவரை தனக்கென்று தனியே ஒரு வாழ்வைக் கருதாதவளாக இருந்தாள். ஆகவே புகார்க் காண்டம் முழுவதிலும் பீடு அன்று”(இரண்டு வார்த்தை சிலம்பு உள கொண்ம்” (மூன்று வார்த்தை மதுரை மூதூர் யாது”(மூன்று வார்த்தை) என்ற எட்டுவார்த்தைகளையே பேசுகிறாள்கண்ணகி வார்த்தைகள் எட்டாயினும் அவள் மனவளர்ச்சி, பண்புநலன் நெஞ்சுறுதி என்பவற்றை விளக்க இவை போதுமானவை ஆகும். காமவேள் கோட்டம் தொழுது தன் கணவனைப்