பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 123 இயற்கையின் இறந்த செயல்களைத் தான் செய்யக்கூடும் என்று கருதி கதிரவனைக் கேட்டாள் என்ற முடிவிற்கு வரநேரிடும். இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகளைச் செய்கின்ற, செய்ய வல்ல பெரியோர்கள் அனைவரும் இச்செயல்களைத் தாம் செய்ய முடியும் என்று கருதினார்கள் என்று கூறுவதே அவர்கள் சிறப்புக்கு இழுக்காகும். அகங்கார மமகாரங்களில் முட்டி நிற்கும் பேதையரே இது என்னால் முடியும் என்று பேசுவர். ஆனால் இத்தகைய எண்ணம் பெரியோர்கள் மனத்தில் தோன்றுவதே இல்லை. விடை பற்றிக் கவலைப்படவில்லை என்றால் பின்னர் ஏன் காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன்?”என்று கேட்க வேண்டும்? தன் கணவன் குற்றமற்றவன் என்று சான்று கூறுவார் யாருமில்லாத நிலையில் தெய்வத்தைச் சாட்சிக்கு அழைக்கிறாள் கண்ணகி. அவள் கற்பின் திண்மையாலும், பண்பாட்டின் சிறப்பாலும் கதிரவன் விடை இறுத்தான் என்பது வேறு அவளைப் பொறுத்த மட்டில் விடை வருமென்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. எதிர் பார்த்து இந்த வினாவை எழுப்பினாள் என்றால் கண்ணகியின் பெருமையை மிகுதியும் குறைத்துவிடும். அதேபோல இவள் எவ்வாறு வழக்குரைக்கப் புகுந்தாள் என்ற வினாவிலும் சில நுணுக்கங்கள் தொக்கி இருக்கின்றன. அவளாக வழக்குரைக்கப் போனாள் என்றோ, தான் கண்ட தீக்கனவில் மன்னனிடம் சென்று முறையிட்டது வந்ததாகலின் அக்கனவை நம்பிப் போனாள் என்றோ கூறுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும். வெட்டுண்ட கணவன் உடலைப் பார்க்க வேண்டுமென்று புறப்படுகிறாள் கண்ணகி. ஆனால் அவன் வெட்டுண்டு மரித்து விட்டான் என்பதை அவளுடையமனம் ஏற்கமறுக்கிறது. எனவே, அந்த இடத்தை நாடிச் செல்கையில் தன்னை மறந்த நிலையில்