பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அ.ச. ஞானசம்பந்தன் அப்பெருமாட்டி புலம்பிக் கொண்டே செல்கிறாள். அவன் இறந்து விட்டான் என்பதை ஏற்க மறுக்கின்ற மனநிலை இறந்துபோய் விட்டான் என்பதை அறிவுறுத்தும் அறிவுநிலை இந்த இரண்டின் இடைப்பட்டு பாடலின் இரண்டு அடிகள் வருகின்றன. காதல் கணவனை காண்பனே ஈதொன்று காதல் கணவனைக் கண்டால் அவன் வாயில் திதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று (ஊழ் ஈழ் வரி 10-12) இறந்து பட்டதை ஏற்க மறுக்கின்ற மனம் என்னுடைய காதலனைக் காண முடியுமோ என்று புலம்புகிறது. இறந்து விட்டான் என்பதை அறிவுறுத்தும் அறிவு இறந்தவன் பேசுவ தில்லை என்பதையும் அறிவுறுத்துகிறது. அந்த அறிவுறுத் தலையும் மீறி, பாடலின் அடுத்தவரி வருகிறது. காதல் கொழு நனைக் கண்டால் என்ற ஐயம் மனத்தில் துளிர்த்து விட்டது. அப்படி யொரு வேளை காணநேர்ந்தாலும் அவனுடைய வாயில் இருந்து குற்றமற்ற வார்த்தைகளைக் கேட்க முடியுமோ என்று புலம்புகிறாள். சில சமயங்களில் நடக்கக் கூடாததையும் நடக்கும் என்று நம்புவது உணர்வில் பிறக்கும் நம்பிக்கை. தன் கற்பின் திண்மையால் இவை இரண்டும் நடக்கும் என்று நம்பினாள் என்று கூறினால் அது கண்ணகிக்குச் செய்யும் பிழையாகும். இத்தகைய அருங் கற்புடையவள் தன்னிடம் ஒர் அதீத ஆற்றல் உண்டு என்று நினைப்பதும் இல்லை. நம்புவதும் இல்லை. அதனால்தான், காண்பனே, கண்டால் கேட்பனே, என்று ஐயப் பொருளிலும் வினாப் பொருளிலும் பேசுவதாகப் பாடலை அமைத்து உள்ளார். இப்படிப்பட்ட ஐயம், வினா முதலியன இல்லாமல் உறுதிப் பாட்டோடு வழக்குரை காதையில் முன்பின் தெரியாத மன்னனை "தேரா மன்னா!”என்று விளித்துப் பேசுகிறாளே அது எவ்வாறு முடிந்தது? என்ற வினா எழலாம், வெட்டுண்ட கனவன் உடலைப்