பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 125 பார்ப்பதற்கு முன்னர், கணவன் உள்ளத்துள் அடங்கிய கண்ணகி யாக இருக்கிறாள். ஆனால் வெட்டுண்ட உடலைக் கண்ட பிறகு அவ்வுடல் ஒன்று சேர்ந்து காதல் கொழுநனாகக் காட்சிதருகிறது. உயிர் பெற்ற கோவலன் அவள் கண்ணிரைத் துடைத்தான். அவள் வேண்டிக் கொண்டபடியே திதறு நல்லுரை ஒன்றும் பகர்ந்தான். அது இருந்தைக்க”என்பதாகும். இதனை ஆசிரியர் "எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப் போனான் (ஊழ் 67) என்று பாடுகிறார். இப்பொழுது கண்ணகி சிந்திக்கத் தொடங்குகிறாள். கற்புடைய மனைவியாகிய தன்னை உடன் அழைத்துச் செல்லாமல் இருந்தைக்க என்று அவன் சொல்லிய காரணமென்ன என்று சிந்திக்கத் துவங்குகிறாள். அச்சிந்தனையின் விளைவுதான் தன் கணவனைக் கள்வன் என்று கூறிய மன்னவனிடம் அவன் கள்வன் அல்லன் என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிற்று, இனி, கணவனுடைய செயலில் தன்னை ஒடுக்கிக் கொண்டது போக தன் சார்பாகவும், அவன் சார்பாகவும் தானே தொழிற்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது என உணர்கிறாள். உறுதிப் பாட்டோடு தானே சிந்தித்து, தானே தொழிற்பட வேண்டும் என்ற சிந்தனையின் பயன்தான் அவளை வழக்குரைக்கத் துரண்டியது. மனைவியின் கையில் சிலம்பைப் பார்க்கின்ற வரை மறுபடியும் வாணிபம் செய்ய வேண்டும், அதுவும் மதுரை சென்று செய்ய வேண்டும் என்ற எவ்வித எண்ணமும் இல்லாத கோவலனுக்கு கண்ணகி காட்டிய சிலம்பின் வழியே விதி விளையாடத் தொடங்கியது. ஆகவே விதி அவன் வாயில் நுழைந்து இச் சிலம்பு...முதலாக மாட மதுரை அகத்துச் சென்று. உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் (க 75-80 ஏடவர் கோதாய் எழுக” என விதி பேசச் செய்தது. அதே விதி இப்பொழுது கோவலனின் கதையை முடித்த