பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 135 மிகுந்தவர்களுக்கும் ஒன்றுதான். அதேபோல, வள்ளுவனுடைய குறளாகிய சட்டங்கள், தமிழ்கூறு நல்லுலகுக்கு மட்டுமல்லாமல் பாண்டும் பொருத்தமுடையன என்பதைச் சொல்ல இனங் கோவடிகள் ஒரு பேருரை வகுத்துத் தருகின்றார். சோழ நாட்டில் தொடங்கிய ஒரு வரலாற்றைப் பாண்டி நாட்டில் வளரச் செய்து சேரநாட்டில் கொண்டுமுடிக்கின்றார். இம் மூன்று நாடுகளையும் ஒன்றாகத் தழுவுவதன் மூலமாக, எந்தச் சட்டத்தைத் தான் அடிப்படையாக மனத்திலே கொண்டுள்ளாரோ அந்தச் சட்டமும் இந்த மூன்று நாடுகட்கும் பொருந்துவதைக் காட்டுகிறது. திருக்குறள் முழுவதையும் கற்பாருக்கு, இரண்டு மூன்று தவறான எண்ணங்கள் வந்து தோன்றத்தான் செய்யும். முதலாவது, வாழ்க்கையில் அன்றாடம் அல்லல்பட்டு உழல்வோருக்கு விதி யினுடைய கொடுமை நினைவு வாராமல் போகாது. மனிதன் எவ்வளவோ முயல்கின்றான், எண்ணுகின்றான், கோட்டைகள் கட்டுகின்றான் என்றாலும் அந்தக் கோட்டைகளும், எண்ணங் களும், முயற்சிகளும் பிடி சாம்பலாகும்பொழுது, தன்னையும் அறியாமல் மனிதன் தன் தகுதியின்மையை நினைத்து வருந்துகிறான் அல்லவா? அப்பொழுது என்ன பேசுகிறான்? தான் ஒரு நல்ல காரியத்தைச் செய்து, அதில் வெற்றியும் பெற்று விட்டால், தான் செய்ததாக நினைந்து மகிழ்வதே மனித இயல்பு, தான் மேற்கொண்ட காரியத்தில் தோல்வியைப் பெறுவானே யானால், பிறரைக் காணும்பொழுது, கடவுளுக்கே நான் நினைத்தது பொறுக்கவில்லை போலிருக்கிறது என்று கூறக் கேட்கிறோம். ஆகவே, தான் மேற்கொண்டது தோல்வியாக ஆகும்பொழுது கடவுளை அழைப்பதும், வெற்றியாக ஆகும் பொழுது தன்னுடைய அறிவுக்குப் பெருமை தந்துகொள்ளு வதும் மனிதனுடைய இயல்பாக அமைந்திருக்கின்றது. இது பிழை என்பதை அறியவேண்டும்.