பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 137 விதியின் கையிலே பட்ட பாத்திரங்கள்தாம் காப்பியத் தலைவனும் தலைவியும் அற்புதமான ஒரு பணக்காரக் கல்யாணம் நடைபெறுகிறது. எத்தனை விருந்தினர்கள்? எவ்வளவு பெரிய கூட்டம்? யானை மீதிருந்து திருமணத்தை அறிவிக்கின்ற அப்படிப்பட்ட ஒரு கல்யாணம் அழைக்கப்பட்டவர்களும் அழைக்கப்படாதவர்களும் ஆகிய எத்தனையோ விருந்தினர் உள்ளனர். அழைக்கப்படாதவர்களும் ஒவ்வொரு கல்யாணத் திலும் வருவதுண்டல்லவா? கண்ணகியின் திருமணத்தில் அழையாத விருந்தினருள்முதலாவதாக இருக்கின்ற விருந்தினர் தான், வள்ளுவர் மற்றொன்று குழினும் தான்முந்துறும்"என்று கூறிய அந்த விருந்தினன்; அதுதான் விதி கூட்டத்தில் வந்து அமர்ந்து இந்தத் திருமணத்தைப் பார்க்கிறான் விதி என்பான். சில நல்லவர்கள் பிறருடைய வாழ்க்கையைக் கண்டு ம்ம்... இப்படியா'என்று வயிறு எரிந்து சொல்லுகிறார்களே அதுபோல, இந்த விதி கண்ணகியைக் கண்டு தன்னுடைய பல்லைக் கடித்துப் பெருமூச்சு விடுகின்றது. என்றாலும், பிறர் அதைக் காண முடிய வில்லை. ஆகவே, இந்தப் பணக்கார வீட்டுக் கல்யாணத் தட புடவில் இந்தப் புதிய விருந்தாளி இருக்கின்றானே அவனுடைய மொறுமொறுப்பை யாரும் கவனிக்கவில்லை. அங்கே தொடங்கு கிற இந்தப் போராட்டம் கண்ணகியினுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது. கண்ணகியின் போராட்டத்தை நினைக்க நினைக்க வள்ளுவர் சிலப்பதிகாரக் கதையைத் தெரிந்து கொண்டுதான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. விதி செய்த போரில் தன்னுடைய போர்த் தந்திரங்களை (Tactics) யெல்லாம் மாற்றிமாற்றிப்பார்க்கின்றது. கோவலனையும் கண்ணகியையும் முதலில் ஒன்றாக வாழச் செய்து பார்க்கின்றது; கண்ணகி மகிழ்ந்தபாடில்லை. கோவலனையும் கண்ணகியையும் பிரித்துப் பார்க்கின்றது. கண்ணகி மசிந்தபாடில்லை. தேவந்தி