பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அ.ச. ஞானசம்பந்தன் என்ற தோழியின் மூலமாகக்கூட வந்து, அந்த விதி விளையாடிப் பார்க்கின்றது. தேவந்தி கண்ணகியைப் பார்த்து வருந்தி காமன் கோட்டம் சென்று வழிபட்டு வரலாம் என்று கூறும்பொழுதும் விதியின் விளையாட்டைத்தான் காண்கின்றோம். அத்தனைக்கும் கண்ணகி அசைந்தவளாகத் தோன்றவில்லை; அதிலும், விதி யுடன் அப் பெருமாட்டி போட்டிபோட்டதாகக் கூடத் தோன்ற வில்லை. மிக எளியவனைத்துச்சமாக உதறித் தள்ளுவதுபோல, விதியைத் துச்சமாகத் தள்ளுகிறாள் கண்ணகி விதியினுடைய கோபம் மிகுந்துகொண்டே செல்கின்றது. மற்றொன்று குழினும் என்றானே'அதுபோலப் புதியபுதிய தந்திரங்களைக் கையாண்டு பார்க்கிறது. காமன் கோட்டம் செல்வது தம்போன்ற கற்புடைய மங்கையர்க்கு பீடன்று என்று சொல்லிவிட்ட கண்ணகியின் எதிரே விதி தன்னுடைய தந்திரத்தை மாற்றுகிறது. இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்த கோவலனை மீண்டும் கொண்டுவந்து அவளிடத்திலே சேர்த்துவிடுகின்றது. விதியின் இப் புதிய தந்திரத்தில் வீழ்ந்து விடுகின்றாள் கண்ணகி. இறுதியாக வள்ளுவனுடைய குறள்தான் வெற்றி பெறுகிறது. சட்டநூல்தான் வெற்றி பெறுகிறது. விதியைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்றுமில்லை. எத்தனை வகையாக, எத்தனை முறையாக எத்தனை வேறுபட்ட வகையில் தடை செய்தாலும், அது அந்தத் தடைகளின் வழியாகவே வந்து நிற்கும் என்று பரிமேலழகர் பொருள் எழுதினார். அது நினைந்துநினைந்து ஆராய்தற்குரியது. எத்தனை வகையாக விதியைத் தடை செய்தாலும் நாம் மேற் கொள்ளும் தடையின்மூலமாகவே அது உள்ளே வந்து நுழையும். எந்த உறுதிப்பாட்டைக் கொண்டு விருப்பு வெறுப்பை நீக்கிக் கண்ணகி விதியைத் தோற்கடிக்க வேண்டுமென்று நினைத்தாளோ, அந்த உறுதியின் மூலமாகவே விதி உள்ளே வருவதைக் காண்கின்றோம். கோவலனைத் திருமணத்தில் சேர்த்து வைத்த காலத்தில் கண்ணகியைத் தோல்வியடையச்