பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அ.ச. ஞானசம்பந்தன் மதுரை மக்கள் கூற்றாகப் பேசுகின்றார். இது என்ன புதுமை? வளையாத செங்கோல் வளைந்ததே ”யென்று அவர்கள் பேசு கிறார்கள், வளையாத செங்கோலையுடைய மன்னவன் இருக் கின்றானே அவனிடத்திலேயும், மற்றொன்று குழினும் தான் முந்துறுகின்ற விதி சென்று தன் கைவரிசையைக் காட்டு கின்றது. உலகு தோன்றிய நாள்தொட்டு மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதல் பிழைத்தது என்றான் பாண்டிய மன்னன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே வாளோடு முன்தோன்றிய இந்தப் பாண்டியன் குடியில் இது வரையில் இப்படிப்பட்ட தவறு நேரவில்லை, இப்பொழுது ஏன் நேர்ந்தது? பின்னர் கண்ணகியாலேயே மன்னவன் திதிலன்' என்று அவன் புகழ்பேசப்படுகின்றதே! அத்தகைய பாண்டியன் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்கின்றான்? மன்னனுடைய விதி பொற்கொல்லன் வடிவாக எதிரே வந்து நிற்கின்றது. கள்வனைக் கொல்வதற்காக அச் சிலம்பைக் கொணர்க என்று கூறவந்த மன்னன் 'கொன்று அச் சிலம்பு கொணர்க” என்றான். ஏன்? 'வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினை அலர்வேம்பன் தேரானாகிக் கொன்று அச்சிலம்பு கொணர்க”என்றான் என்று அடிகள் காரணம் காட்டுகின்றார். ஐயோ பாவம் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்யப்போகின்றான் பாண்டியன்? ஒப்பற்ற கதைக் கவிஞராகிய இளங்கோவடிகள் தம்முடைய அருமையான பாத்திரமாகிய பாண்டியன் பெருந் தவறிழைத்து நம் மதிப்பிலிருந்து கீழே விழும்பொழுது நொறுங்கிப் போகாமல் இருப்பதற்காக ஒர் அதிர்ச்சி தாங்கியை (Shock-absorber) வைக்கிறார். ஆதலின் அவரிடம் தவறு காண முடியாது. பைத்தியம் ஒன்று பெருந்தவறு இழைத்து விட்டாலும் பார்ப்பவர்கள் 'பாவம் குற்றம் சொல்லாதீங்க? பைத்தியம் அது அது என்ன பண்ணும்?” என்று சொல்லு வார்களல்லவா? அது போல வினையின் காரணமாகப் பாண்டியன் இத்