பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 141 தவறிழைத்தான் என்று கூறி நம் சினத்தை அமைதிப்படுத்து கிறார் ஆசிரியர் கொலை முதலிய குற்றத்தைக் கூட மூளை குழம்பிவிட்டவன் அல்லது பைத்தியம் ஒருவன் செய்துவிட்டால் தண்டனை இல்லை. கருத்திலாக்குற்றம் (Unotivated) என்று சொல்லுவார்கள் வேண்டுமென்றே செய்கின்ற காரியம் வேறு. தவறுதலாகச் செய்யப்படுகின்ற காரியம் வேறு. ஆதலால் பாண்டியன் செய்த பெருந் தவறுக்கு விதியை முன் நிறுத்தி அமைதி காட்டுகிறார் இளங்கோவடிகள். அவன் பேரின் தவறு காண வேண்டா வினை விளை காலம் அது என்கிறார். இன்றைக்கு அறிவுக்குத் தலைமை இடம் கொடுக்கும் காலமாகலான், விதி செய்யச் சொன்னால் அறிவு எங்கே போயிற்று என்று கேட்டுவிடுவார்களே என்று கருதிப்போலும் இளங்கோ 'யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி” என்றார். தேர்தல் அறிவின் செயலாகும். போற்றப்படும் அந்த அறிவே விடைபெற்றுக் கொண்ட நிலைமைதான் விதியின் போராட்டாகும். விதி உள்ளே துழையும்பொழுது முதன்முதலாக விடைபெற்றுக்கொள்ளுவது அறிவுதான், அறிவு அங்கே இருக்குமேயானால், இப்படிப்பட்ட செயல் நிகழாது. பின்னர் ஏன் நிகழ்ந்தது? அறிவு அழிந்ததனால் அந்த அறிவு ஏன் அழிந்தது? கற்றறிவும் பண்பாடும் உடைய அவனையும் மீறி அழிந்தது என்றால் அதைத்தான் விதி என்று கூறுகிறோம். 'யாவதும் சினையலர் வேம்பன் தேரானாகி’.அந்த பாவதும் என்று சொல்லிலே இருக்கின்ற அந்தப் பொருள் ஆழத்தை மற்றொன்று. குழினும் என்ற சொல்லின் ஆழத்துடன் வைத்துக் கான வேண்டும் கல்வியால் பெரியவன்; பண்பாட்டான் பெரியவன் பரம்பரையால் பெரியவன் குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’ என்றும் சொல்வார்களே தவறே நிகழாத பாண்டியன் குடியிலே எவ்வாறு இப்படிப்பட்ட தவறு வந்து நுழைய முடியும் என்று