பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 143 கிறார். இத்தனை ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்து அவளுடைய பண்பாட்டை அறிந்திருந்தும் மாயப் பொய்பல கூட்டும் மாயத் தாள்' என்றால், கோவலன் பேசுவது விதியின் விளையாட்டே யாகும். கோவலன் பிரிவால் துயரடைந்த மகளிர் இருவர் ஒருத்தி கண்ணகி மற்றொருத்தி மாதவி கோவலன் கண்ணகியைப் பிரிந்து சென்றமையின் அவள் அடைந்ததுயரம் இருவகைப்படும். இளமை யோடிருந்த அவள் வாழ்வு பாழாயிற்று எனினும் அவள் அதற்குக் கவலையுறவில்லை. இப் பிரிவால் அவள் துன்புற்றாள் என்றும் கூறமுடியாது. காரணம் துன்பம் என்பது வருந்து கின்றவர்களுடைய மன நிலையை வைத்துத்தான் துன்பமா கிறதே தவிர, துன்பம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. துன்பத்தை இன்பமாகக் கொண்டுவிட்டால் துன்பம் எங்கே இருக்கிறது? கண்ணகியைப் பொறுத்த மட்டில் முதல் வகைக்காக அப் பெருமாட்டி துன்பப்படவில்லை எனினும் இரண்டாவ தொன்றுக்காகப் பெரிதும் வருந்தினாள். கணவனுடன் இல்லா மையால் விருந்துபசரித்தல், துறவிகளை உபசரித்தல் முதலிய இல்லறக் கடமைகளைச் செய்ய இயலவில்லையே என்பதற்காக வருந்தினாள் மாதவியின் நிலை அவ்வாறு இல்லை. கோவலனுடன் வாழ்வை விரும்பி இருந்தவள். எனவே, அவன் இவளைக் காரணமின்றி விட்டுப் பிரியும்போது இருவகைக் குற்றம் செய்கின்றான், முதலாவது குற்றம், இதுகாறும் அவளோடு வாழ்ந்தும் அவளைத் தெரிந்து கொள்ளாத குற்றம், இரண்டாவது குற்றம், தன்னையே பற்றுக்கோடாகப்பற்றி முழுதும் நம்பியிருந்த ஒருத்தியைத் துறந்து அவளுடைய வாழ்வை அழித்ததாகும். இவ்வாறு இரண்டு பெரிய குற்றங்கள் இழைத்தவனாயினும் அடிகள் அவனைக் காயவில்லை. கற்றறிவும், பண்பாடும், கருணையும் நிறைந்தவனாகிய கோவலன் இவ்வாறு தவறிழைத்