பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 147 மாமன் மாமியரைக் கண்டு அவள் புன்முறுவலுடன் வர வேற்றாலும் அச் சிரிப்பு உதட்டளவில் தோன்றியது என்பதை அறிந்து அவர்கள் வருந்தினார்களாம். போலியாகச் சிரித்துக் கொண்டு கண்ணகி வாழவேண்டிய இன்றியமையாமை யாது? அவள் தந்தையிடம் சென்றிருக்கலாமே? எவ்வளவு பெரிய செல்வன் அவன்? இல்லை, மாமன் மாமியர்கள்தாம் இவளைத் தாங்கமாட்டார்களா? சிலம்புதான் மிச்சமிருக்கிறதென்று சொல்லுகிற அளவுக்கு வாழ்க்கையில் வறுமை வந்துற்றதே. எவ்வளவு வசதி குறைந்த வாழ்க்கையாக இருக்கும்? வசதிக் குறைவாகவே பிறந்து வளர்ந்திருந்தால் கவலையில்லை. ஆனால், பெரு வளத்திலே வாழ்ந்த அவள் தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் என்று சொல்லுவார்களே அந்த முறையில், அந்த வாழ்ந்து-கெட்ட சூழ்நிலையிலே, எவ்வளவு சுலபமாக அவள் தப்பித்துக்கொண்டிருக்கலாம். இந்நிலையிலும் பிறர் இரக்கத்தை அவள் வேண்டவில்லை. அதுவே, தன்மான உணர்ச்சி. குடும்பத்தின் மரியாதை வெளியிலே கெடக்கூடாது என்ற உறுதிப்பாடு குடும்பத்தின் குற்றத்தை மறைக்கவேண்டும் என்று அவள் கொண்ட உறுதியான கொள்கை, தன்னுடைய எல்லையற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. அந்தத் துன்பம் மலைபோல வந்து விழ்கின்றது எனினும் அவள் வாய் திறந்து பேசவில்லை. மாமன் மாமியரிடம்கூட வாய் திறந்து பேசவில்லை என்றால், அந்த உறுதிப்பாட்டை என்னவென்று புகழ்வது? அதனுடைய பயன் என்ன ஆகிறது? இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ? என்ற வள்ளுவன் குறளின் முற்பகுதி நினைவுக்கு வருகிறது. ஊரில் உண்டான துன்பங்களுக் கெல்லாம் அவள்தான் உறைவிடமாக இருக்கிறாள். கணவனைப் பிரிந்ததனாலே வந்த வருத்தம்; தன்னுடைய வாழ்க்கையிலே விருந்தினர் முதலானவர்களை உபசரிக்க முடியவில்லையே என்ற