பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டிய கட்டாயம் பதிக ஆசிரியர்க்கு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு அவர் கண்ட முடிவு எவ்வளவு பொருத்தமற்றது என்பதைப் பின்னர்க் காணலாம்.


காப்பியம் பாட வந்த இளங்கோவிற்கே இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சேர நாட்டை அடுத்து உள்ள பாண்டிய நாட்டின் தலை நகரம் ஒரு பெண்ணரசியால் தியூட்டப்பட்டது, தவறு இழைத்த மன்னவன் அத்தவறுக்குக் கழுவாயாக தன் உயிரையே கொடுத்தான் என்ற மிகப் பெரிய செய்திகள் அண்டை நாட்டான் ஆகிய சேரனுக்கு எவ்வாறு தெரியாமல் இருந்தன? ஒற்றர்கள் மூலம் சேரன் இதையறியவில்லை என்றால் இது அவன் ஆட்சிக்கே ஒரு குறைபாட்டை உண்டாக்கும். ஒற்றர் மூலம் அறிந்து செங்குட்டுவன் கண்ணகியின் பெருமையுணர்ந்தான் என்று பாடியிருந்தால் அவள் தன் நாட்டை அடைந்ததும் பின்னர் தேவர் உலகம் சென்றதும் செங்குட்டுவன் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும். காரணம் கண்ணகியின் சேரநாட்டுச் செலவை ஒற்றர்கள் அறிந்தார்கள் என்று சொல்வது பொருத்த முடையதாகாது. இப் பிரச்சனையைத் தீர்க்க காப்பியப் புலவர் கையாண்ட வழி மிகச் சிறப்புடையதாகும். எனவே செங்குட்டுவன் மலைவளங்கானச் சென்றான். வேட்டுவ மக்கள் அவனைக் காண வந்து ஒரு முலை இழந்த திருமாபத் திணி'தேவருலகம் சென்ற வரலாற்றை தாம் கண்டவாறு கூறினர் இந்த நிலையிலும் மதுரையில் நடந்ததையோ கண்ணகி வரலாற்றையோ செங்குட்டுவன் அறிய வாய்ப்பில்லை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகக் காப்பியப் புலவர் தண்டமிழாசான் சாத்தன்'என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்குகிறார். வேடுவர்கள் கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாத செங்குட்டுவனுக்கு உடனிருந்த புலவர் சாத்தன் கண்ணகி வரலாற்றைக் கூறிய தாகக் காப்பியம் பேசுகிறது.