பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அ.ச. ஞானசம்பந்தன் வருத்தம் இந்த இரண்டு வருத்தம்கூடப் பெரிதில்லை. உலக அனுபவம் பெற்றவர்களுக்கு மூன்றாவது ஒன்றும் உண்டு. நம்முடைய மக்கள் பிறர் வாழ்வில் தலையிடாமல் இருப்பதில்லை. தேவை இல்லாதவிடத்தும் தம் அனுதாபத்தைக் காட்ட முனைந்து ஆறி இருக்கும் தழும்பை மறந்துபோனதுயரத்தை - கிளறிவிட்டு விடுகின்றனர். உற்றார், உறவினர், நொதுமலர் ஆகிய அனை வரும் கண்ணகியிடம் தம் வெற்று அனுதாபத்தை அறிவிக்கத் தொடங்குகின்றனர். அவர்கள் தம்முடைய அனுதாபத்தைத் தெரி வித்துக்கொள்வதானால்தான் கண்ணகி தன் குடும்ப கெளரவம் பறிபோகிறதாக நினைத்து வருந்துகிறாள். இத் தமிழர்கள் எவ்வளவு துன்பம் வந்த காலத்திலும், செல்வம் மல்கிய காலத் திலும் அன்றி, அல்லல் நல்குரவு ஆனபோதிலும்” அயல் அறியாமை வாழ விரும்புகிற பண்பாடுடையவர்கள். அடுத்த வீட்டுக்காரர்களுக்குத் தம் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழுவதே குறிக்கோள் வாழ்க்கையாகக் கொண்ட வர்கள் இத் தமிழர்கள். அந்தப் பண்பாட்டிலே ஊறித்திளைத்த வளாகிய கண்ணகிக்கு, பிறர் தங்களுடைய குடும்பத்தின் சூழ்நிலையை எடுத்துப் பேசுவதும் அதன் காரணமாகத் தனக்கு வருத்தம் தெரிவிப்பதும் எல்லையற்ற துன்பத்தைத் தருகிறது. விநாடிதோறும் இதனைப் பொறுத்துக் கொண்டிருக்கவேண்டிய சோதனைக்கு ஆளாகிறாள் இவள். இத்தனையும் நினைந்து பார்க்கும்பொழுதுதான் இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ, குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு” என்ற குறள் நம்முடைய நினைவுக்கு வருகிறது. - வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் பேசப்பட்ட அத்தனைக் குறள்களும் கண்ணகியின் வாழ்க்கையில் ஒன்றொன்றாக வந்து காட்சியளிப்பதைக் காணலாம். தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள்