பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 151 யாக என்றான். ஒருவர் வயிற்று வலியிலே துடிக்கிறார். வயிற்று நோயை விலைக்கு வாங்க முடியுமா? உண்மையாக அவன் துன்பத்தில் பங்கு கொள்வதென்றால், நீயும் வயிற்று வலியை வரவழைத்துக்கொண்டு அனுபவி என்றான். ஆனால், கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது!’ என்றும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"என்றும் கூறியதற்கு இது எடுத்துக் காட்டு வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் எப்படி இருக்கவேண்டுமென்றால், அற்பமானதாகவும் அடையக் கூடியதாகவும் இருக்கக்கூடாது; மிக உயர்வாக இருக்க வேண்டும். அறவாழ்வினுடைய அடிப்படை இது என்றால், பிறனுடைய துன்பத்தைப் போக்க முடியாதபொழுது நீயும் அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கூறும் அளவுக்குச் செல்கிறது. மனுநீதிச் சோழனுடைய வரலாறு அதுதான் இறந்த கன்றுக்குட்டியை எழுப்ப முடியாது. வேறென்ன செய்வது? கன்றை இழந்த பசுவின் துன்பத்தை நானும் அடைவேன் என்கிறான் மன்னன். உன்னுடைய துயரத்தை நாங்கள் பங்கு கொள்ளுகிறோம் என்று பசுவினிடம் சொல்லிவிட்டால் போதுமா? அது தவறு என்கிறான் மன்னன். நான் அனுபவிக்கிறேன் என்று சொன்னால்மட்டும் போதாது. தானும் உண்மையிலேயே அனுப விக்கவேண்டுமென்றுதான் தன் மகனை, ஒரு மைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணராமல், அவன் மருமத்தின் இடையே தேரைச் செலுத்தினான். வள்ளுவன் குறளுக்கு அவன் கண்ட இலக்கியம், சிலப்பதிகாரத்திலேயும் இக் குறளைக் காண முடிகின்றது. அறிவினால் ஆகுவதுண்டோ'என்ற குறளை எங்கே பேசுகிறார்? மதுரைமக்களுடைய கூற்றாக வைத்துப் பேசுகின்றார் கண்ணகி துயரை மதுரை மக்கள் பார்த்தார்கள். சான்றோரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டுகொல்' என்று அவள் அழுத