பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அச. ஞானசம்பந்தன் அரற்றலில், கதறிய கதறலில் மற்ற மக்கள் உண்மையைக் கண்டு கொண்டார்கள். தவறு நடந்துவிட்டது என்பதை அவள் அரற்றல் காட்டிவிட்டது. மதுரை மக்கள் இந்நிலையில் என்ன செய்ய முடியும்? அவளுடைய துயரத்தை அவர்கள் போக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. கடவுள் ஒருவரையல்லாமல் கொலை செய்த பாண்டியன்கூடப் போக்க முடியாத துயரத்தைப் பெற்றுவிட்டாள் அவள் பட்டேன் ஒரு துயரம், யாரும் படாதது என்று அவளே கூறுகிறாள். இப்பொழுது என்ன செய்ய முடியும் மதுரை மக்கள்: முன்னர்ச்சட்டம் செய்தவர் அறிவினால் ஆகுவதுண்டோ'என்று கூறிவிட்டாரே-இயற்றிவிட்டாரே என்ன செய்யமுடியும்? மதுரை மக்கள் பார்த்துக் கண்ணிர் விட்டார்கள் என்றால், கண்ணிர் பலதரப்படுமே என்று தெரியும் என்ன செய்யமுடியும் அவர்கள்? அவர்கள் செய்ததை மல்லல் மதுரையாரெல்லாரும் தாம் மயங்கி' என்ற சொல்வில் காட்டிவிட்டார் இளங்கோ, அந்த மயங்கி என்ற சொல்லில் தான் பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுகின்ற அந்த ஒப்பற்ற பண்பாட்டை வைத்துக் காட்டுகின்றார். மயங்கி என்று சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருளென்ன? செய்வது அறியாது திகைத்து விழுதல். கண்ணகியினுடைய துயரத்தை எவ்விதமாகவேனும் போக்க வேண்டுமென்று நினைத்தார்கள். எவ்விதத்திலும் போக்க அவர்களுக்கு வழியில்லை. என்ன செய்தார்கள்? மயங்கி வீழ்ந்துவிட்டார்கள். கண்ணகி பன்முறை மயங்கி விழ்கின்றாள் துயரந் தாளாமல். இவர்களும் அந்தத் துன்பத்தைப் பங்கு கொண்டு மயங்கி வீழ்கின்றார்கள். வள்ளுவருடைய இலக்கணத்தில் காணப்படுகின்ற மிகமிக உண்மையான இடங்களுக்கெல்லாம் பேருரைகள் வகுக்கப்படு கின்றதைச் சிலப்பதிகாரத்தில் காணுகின்றோம். இனி நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்” என்று ஒரு குறள் பேசுகிறது. தினந்