பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 153 தோறும் மன்னன் நீதி வழங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்கிறார். ஒன்றே முக்கால் அடி உள்ள குறளில் வள்ளுவன் நயம் வைத்தால் அந்த நயத்தை இளங்கோ வாங்குகிறார். நாடொறும் முறை செய்யவேண்டும் முறை செய்வதிலும் நாடி முறை செய்யவேண்டும் நாடி என்றால் ஆராய்ந்து என்பது பொருள். கள்வனைக்கோறல் கடுங்கோலன்று என்று மன்னவன் சொல்லிவிட்டான். அதற்கு என்ன அடிப்படையாக இருந்தது? தேவியின் திருட்டுப் போன சிலம்பு கள்வன் கையகத்தது எனப் பொற்கொல்லன் கூறினான். சினையலர் வேம்பன் தேரானாகிக் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு'என்று சொல்லிவிட்டான். அவனைப் பிடித்துக் கொண்டு வார விசாரித்துத் தவறு நேர்ந் திருக்குமேயானால் அவனைத் தண்டிக்கலாம் என்ற பொருளில் கள்வனைக் கொல்ல அச் சிலம்பு கொணர்க இங்கு என்று சொல்லியிருக்க வேண்டும். கொல்ல என்ற எதிர்கால வினை யெச்சம் கொன்று என்று இறந்தகால வினையெச்சமாக அங்கு விழுந்ததே அதற்கு இலக்கணம் இந்தக் குறள்;முறை செய்தான்; ஆனால், நாடி முறை செய்யவில்லை. நாடுதல் என்பது எங்கே? எதிர்மறை, உடன்பாடு இரண்டையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த நாடுதலாகிய ஒன்று செய்யாமையின் பெருந் தவறு விளைந்துவிட்டது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற குறளையும் 'ஊழிற் பெருவலி யாவுள' என்ற குறளையும் சிலப்பதிகாரம் முழுவதும் விரித்துப் பேசுகிறது. . சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை யறிந்து'-இந்த ஒரு குறளுக்கு எவ்வளவு விரிவுரை செய்கின்றார் இளங்கோவடிகள் அதிலும் கண்ணகியின் கூற்றாக இச் சொற் செல்வத்தை வைத்து மனித சமுதாயம் முழுவதற்கும் பயன்படும் முறையில் இளங்