பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 157 தள்ளினால் எதிர்ப்புச் சக்தியைப் பயன்படுத்த முடியாது. முன்னர் சொன்ன ஊழ் வினை எப்படிப்பட்டது? மற்றொன்று சூழினும் தான் முந்துறக் கூடியதல்லவா? ஊழ்வினையை எதிர்த்துப் போராடுகிறவர்கள் யாருமில்லையே. கோவலனை ஊழ்வினை பின்னே நின்று தள்ளியதால் (துரப்ப) அவன் அதனை எதிர்த்துப் போராடச்சக்தியற்று இவண் வந்துற்றான்'என்கிறாள் கண்ணகி இவ்வளவு பொருட் சிறப்பையும் இளங்கோவடிகள் எங்கே காட்ட முடியும்? துரப்ப என்ற சொல்லிலே வைத்துக் காட்டுகின்றார். எனவே, வள்ளுவர், இளங்கோ என்ற இருவரும் தமிழ் உலகுக்கும், தமிழ் இல்க்கிய உலகுக்கும், தமிழ்ப் பண்பாட்டை வடித்துக் காட்டுகின்ற சூழ்நிலைக்கும் இரண்டு கண்ணாவார்கள் என்பதும், உலகில் என்றும் இரண்டு கண்களும் ஒரே பொருளைத் தான் காணும் என்பதும், அந்த உலகிலே இந்த இரண்டு பெரு மக்களும் ஒரே பொருளைக் கருதினார்கள் என்பதும், கண்ணினுள் எத்தனை மாறுபாடுகள் இருப்பினும் காணப்படும் பொருள்கள் ஒன்றாகவே இருத்தல்போல், பெருங் காப்பியமாக ஒன்று அமைந்திருப்பினும், ஒன்றே முக்கால் அடியை உடையதாக மற்றொன்று அமைந்திருப்பினும், இவை இரண்டினாலும் நுவலப்பட்ட பொருள் ஒன்றேயாம் என்பதும், ஒன்று சட்டமாக அமைந்தது என்பதும், அந்தச் சட்டத்தை விரிவுரை செய்கின்ற தாக மற்றொன்று அமைந்தது என்பதும், சட்டம் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் பரந்துபட்டு நில்லாது என்பதும், விரிவுரை அனைவரும் அறிந்து பயன் அடையக்கூடிய சூழ் நிலையில் இருக்கிறது என்பதும், திருக்குறள் சதுரித்து வைத்த சலவைக் கல்லாய் அமைந்திருக்கிறது என்பதும், சதுரித்து வைத்த சலவைக் கல்லை எடுத்துச் சுந்தரமாம் ஒரு காப்பியமாக இளங் கோவடிகள் செய்தார் என்பதும், எங்கே எங்கே பயன் உடையவை உண்டோ, அங்கே அங்கே அதனைக் குறிப்பிட் டுச் சொல்லுவது