பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 17 அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்! (பதிகம் : 39-44) இவ்வடிகள் எவ்வளவு பொருத்தமில்லாமல் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன என்பது சிந்திப்பவர் அனைவர்க்கும் புலனாகும். ஊர் முழுவதும் திப்பற்றி எரியும்போது நட்ட நடு நிசியில் வெள்ளியம்பலத்தில் தான் படுத்துக்கிடந்ததாகச் சாத்தன் பேசுகிறான். இங்கே வெள்ளியம்பலம் என்று கூறப் பட்டது எப்பகுதியை? இன்று மதுரையில் வெள்ளியம்பலம் என்று கூறப்படும் பகுதி மீனாட்சியம்மையின் கோயிலின் ஒரு பகுதி யாகும். நடராசப் பெருமான் கால் மாறி ஆடும் இடமே வெள்ளி யம்பலம் என்று கூறப்படுகிறது. இளங்கோ பாடுகின்ற காலத்தில் இப்பகுதி அதே பெயருடன் இருந்தது என்று கூறமுடியாது. காரணம் இறைவன் ஆடும் ஆனந்த தாண்ட வத்தின் ஒரு பகுதியாகும் இது. ஆனந்தத் தாண்டவம் முதன் முதலின் ஆடப்பெற்றது. தில்லையில்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப் பெறும் காரைக்கால் அம்மையார் இறைவனின் தாண்டவத்தைப் பற்றி திருவாலங்காட்டு இரண்டு பதிகங் களிலும், அற்புதத் திருவந்தாதியிலும் பாடுகிறார் என்றாலும் திருவாலங்காட்டில் ஆடும் ஊர்த்துவதாண்டவம் பற்றிப் பாடு கிறாரே அல்லாமல் தில்லையைப் பற்றி ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. திருவாலங்காட்டுத் தல புராணப்படி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தில்லையம்பலம் தோன்றியது என்று பேசப்படுகிறது. அப்படியானால் வெள்ளியம் பலமும் கால் மாறி ஆடிய வரலாறும் ஆறாம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியிருக்க வேண்டும். இளங்கோவின்