பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 19 இதனைப் புரிந்து கொள்ளாமையால் பாயிர ஆசிரியன் ஆரஞர் உற்ற வீர பத்தினிமுன் மதுரைமாதெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்' என்று கூறுவதாகப் பாடியுள்ளான். இதில் ஆரஞர் உற்ற விர பத்தினி முன் என்பது வரையில் காப்பியத்தில் உள்ள அடியாகும். அதை அப்படியே எடுத்தாண்ட பதிக ஆசிரியர் மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னே தோன்றிவிட்டது என்று பாடிவிட்டார். இதன் பிறகு, வினைக் கொள்கையை மிகுதியும் வலியுறுத்த விரும்பிய சமணர் ஆகிய பதிக ஆசிரியர் இந் நிகழ்ச்சியின் பின்னணியை வினைக் கொள்கையின் அடிப் படையில் மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குக் கூறுவதாகச் சொல்லிச் செல்கிறார். அது முடிந்தபின் பதிக ஆசிரியர் கூறும் சில அடிகள் குழப்பத்தை உண்டாக்குகின்றன. அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது முதல் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள் என்று அடிகள் கூறினாராம். எதிரே இருந்த தண்டமிழ் சாத்தன் இதிலுள்ள சிக்கலைக் கருத்திற் கொண்டாராம். சிக்கல் என்னவென்றால் சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூன்று அரசுகளையும் இணைத்துப் பாட வேண்டிய காப்பியம் ஆகும் இது. இளங் கோவடிகள் என்பவர் சேரனுடைய தம்பியாக இருப்பின் ஏனைய இரண்டு அரசர்களைப் பற்றி இவர் பாடுவது ஒரளவு சங்கடத்தை உண்டாக்கும். அதனாலேயே இந்தச் சிக்கலைத் தவிர்க்க நினைத்த சாத்தன் இக்காப்பியம் முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியதாயிற்றே. இதனை அடிகள் நீரே அருளுக என்று கேட்டாராம். இதில் நீரே என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருளில் அமைத்து தாங்கள செய்யப்போகிறீர்கள்? என்ற கருத்தில் சாத்தன் கேட்டாராம். ஏகாரத்திற்கு பல பொருளுண்டு. வினாப் பொருள், ஐயப்பொருள், உறுதிப்பொருள் (தேற்றேகாரம்)