பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அ.ச. ஞானசம்பந்தன் ஆகிய பல பொருள்களில் வரும். பதிக ஆசிரியர் கூற்றுப் படி இதையெடுத்துக் கொண்டு நானே செய்கிறேன் என்று அடிகள் முடிவு செய்து விட்டாராம். இது பதிக ஆசிரியர் கூற்று. இந்த நிகழ்ச்சி முழுவதும் குறவர்கள் வந்து இளங்கோவிடம் கண்ணகியைப் பற்றிக் கூறியதாக வரும் பகுதி எவ்வளவு பொருத்தமற்றதோ அவ்வளவு பொருத்தமற்றதாகும். சங்கப் பாடல்களில் சாத்தன் என்ற பெயரில் 19 பேர் காணப் படுகின்றனர். அழிசி நச்சாத்தனார் முதல் மோசி சாத்தனார் வரை உள்ள இப்பெயர்களுள் ஒரேயொருவருடைய பெயர் மட்டும் அடை மொழி இல்லாமல் காணப்படுகிறது. எஞ்சிய 18 பெயர் களும் அடைமொழியோடு வந்துள்ளன. அவருள் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயருமுண்டு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் சாத்தனை சங்கப் புலவர்கள் வரிசையில் தேடுவது சரியில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமேயாகும். அப்படியானால் இந்தக் கணக்கெடுப்பினால் பயன் என்ன என்று கேட்கப்படலாம். அக்காலப் பெயர்களுள் சாத்தன் என்ற பெயர் மிக அதிகமாகக் காணப்பட்டது என்பதுதான் இங்கு சிந்திக்க வேண்டிய கருத்தாகும். காப்பிய ஆசிரியர், செங்குட்டுவனுக்கு கண்ணகியின் வரலாற்றைத் தெரிவிப்பதற்கு ஒரு கருவியைத் தேடினார். வேறுவழி ஒன்றும் புலப்படாமையால் தண்டமிழாசான் சாத்தன் என்ற பாத்திரத்தைப் படைத்தார். இந்தப் பாத்திரம் கண்ணகி வரலாற்றைத் தான் எவ்வாறு அறிந்தது என்று சொல்லவே யில்லை. அப்படிச் சொல்லாததற்கு மிகமிக முக்கியமானதும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதுமான ஒரு காரணம் உண்டு. மதுரை தீப் பிடித்த 14 வது நாள் கண்ணகி வீடுபேற்றை அடைகிறாள். இந்தப் பதினான்கு நாட்களும் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டேயிருந்தாள் என்றும் இறுதியாக நெடுவேள் குன்றம்