பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 25 கிறது. இந்தக் காதையின் முற்பகுதியில் வரும் உரைப்பாட்டு மடையில் குறவர்கள் கண்ணகியைக் கண்ட நிகழ்ச்சியும், அவளையார் என்று கேட்டதும், அவள்மதுரை அழித்த செய்தியும், தான் இங்கு வந்த நிலையும் கூறியதாக உள்ள பகுதி இடம்பெறுகிறது. எனவே குன்றக்குரவையும் ஆய்ச்சியர் குரவை போல, காப்பிய வளர்ச்சிக்கும் கட்டுப்கோப்புக்கும் உறுதுணையாக நிற்றலின் இப்பகுதியையும் காப்பியத்தில் இருந்து எடுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு பகுதியில் குறவர்கள் முருகனைப் போற்றினார்கள் என்று சொல்ல வரும்பொழுது எவ்வாறு போற்றினார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர் என்வே இதில் அவருடய சொந்த விருப்பைப் பாடினார் என்று கூறுதல் பொருத்த முடையதாகாது. இவ்விரண்டு பகுதியிலும் காப்பிய மாந்தர்கள் தத்தம் மரபிற்கேற்ற முறையில் தத்தம் வழிபடு தெய்வங்களைப் பாடுகிறார்கள் ஆதலின் இதில் ஆசிரியருடைய பங்கு எதுவு மில்லை. அதே நேரத்தில் தேவையில்லாமல் ஆசிரியர் இப் பகுதியைப் புகுத்தி உள்ளாரா என்ற வினாத் தோன்றினால் உறுதியாக இல்லையென்ற விடைதான் கிடைக்கும். இவை பிரண்டிற்கும் எதிராக வேட்டுவ வரி என்ற பகுதி அமைந் துள்ளதைக் காணலாம். கண்ணகி, கவுந்தியடிகள் என்ற இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டுவழி வந்த கோவலன் கதிரவனுடைய சிற்றம் தாங்கமுடியாமல் கண்ணகி நொந்து போவதைக் கண்டு வழியிலுள்ள ஐயைக் கோட்டம் என்ற கோயிலின் ஒரு பக்கமாக நிழலுக்கு ஒதுங்கினான் என்று காதை தொடங்குகிறது. வெயில் தணிகின்ற வரை தங்குவதற்கு நிழல் தரும் ஜயைக் கோட்டத்தை அடைந்தனரே தவிர வேறு கருத்து ஒன்றுமில்லை. இதற்கு அடுத்தபடியாக வரும் புறஞ்சேரியிறுத்த காதையில் பகல் பயணத்தைவிட்டு அச்சம் இல்லாமல் பாண்டிய நாட்டில் இரவுப் பயணம் செய்யலாம் என்று காவுந்தியடிகள்