பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 27 இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியா யுலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பட் (வேட்டுவ வரி 47-50) சாதாரண சாலினியாக இருப்பின் கண்ணகியை யாரென்று அறியவோ கற்புக்கடம் பூண்ட தெய்வம் என்றோ அறிந்திருக்க முடியாது. கவுந்தியடிகள்கூட சில நாட்கள் கண்ணகியிடம் பழகிய பிறகே கற்புக்கடம் பூண்ட தெய்வம் என்றும் வண்ணச் சீறடி, மண்மகள் அறிந்திலள் என்றும் பேசுகிறார். ஆனால் இடங்கை வலங்கை வேறுபாடு அறியாத சாலிணி இவளோ கொங்கச் செல்வி என்று எப்படித் தொடங்கி இருக்க முடியும்? எனவேதான் ஆசிரியர் தெய்வம் உற்று உரைப்பு என்று முடிக் கிறார். இவ்வாறு கூறுவதில் ஒரு துண்மையான கருத்தைப் பெற வைக்கிறார் ஆசிரியர் தெய்வம் உற்ற நிலையில் கண்ணகியின் எதிர்காலம் தெரிகிறது. அயல் அறியாமல் வாழ்ந்த இப்பெருமாட்டி உலகத்திற்கு ஒரு மணி என்று அனைவராலும் போற்றப்படும் நிலையை அடையப் போகிறாள் என்ற குறிப்பும் இதனால் பெறப்படுகிறது. இதுவரை கூறியதோடு நிறுத்தியிருந்தால் கவுந்தியடி களைப் போன்ற ஒரு துறவி மட்டும் அல்லாமல் தெய்வங்கூட உயர்த்திப் பேசுகிறது என்று அமைதி கொள்ளலாம். இதனையடுத்து வேடுவர்கள் கொற்றவையைப் பரவு கிறார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வரிப்பாடல்கள் இளங்கோவடிகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டில் வழங்கி வந்தன. அவற்றை ஓரளவு மாற்றி அடிகள் பயன்படுத்திக் கொண்டார் என்ற கருத்தும் தமிழகத்தில் நிலவுகிறது. அதை ஏற்றுக் கொள்வதானால் கூட