பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அ.ச. ஞானசம்பந்தன் நம்முடைய ஐயம் தெளிந்த பாடில்லை. காப்பியக்கட்டுக் கோப்புக்கும் காப்பிய வளர்ச்சிக்கும் ஆய்ச்சியர் குரவை போன்றோ குன்றக் குரவை போன்றோ வேட்டுவ வரி ஒரு சிறிதும் உதவவில்லை என்பதை முன்னரும் குறிப்பிட்டோம். அத்தகைய வேட்டுவ வரியில் கொற்றவையைப் புகழ்வதற்கு ஆய்ச்சியர் குரவை போன்று கர்ண பரம்பரைக் கதைகளைப் பயன்படுத்துவதோடு அடிகள் நிற்கவில்லை, ஆய்ச்சியர் குரவையில் காணப்படுவது போல பொதுப்படையாகக் கொற்றவையின் புகழ்ச்சி பேசப்படுவதோடு அல்லாமல் தனிப்பட்ட சொற்களால் அவள் புகழ் பேசப்படுகிறது. தொடர்ந்து வரும் கொற்றவை புகழ்பாடும் இச்சொற்றொடர்களைப் படிக்கும் பொழுது இவற்றை வேறெங்கோ படித்த நினைவு மனத்தில் தோன்றுகிறது. நின்று நிதானித்தால் தேவி பாகவதத்தில் காணப்படும் லலிதா சகஸ்ர நாமங்களில் வரும் பல மந்திரங் களை மொழிபெயர்த்தது போன்று இவை இருப்பதைக் கான லாம். இத்தகைய புகழ்த் தொடர்கள் தமிழிலேயே இருந்திருக்கக் கூடாதா என்ற வினா தோன்றுதல் இயல்பு அதை மறுக்கும் முறையில் பலபல மந்திரங்கள் உண்மையிலேயே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதை நடுநிலையோடு இவற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். - இனி வேட்டுவ வரியின் உரைப்பாட்டு மடை தொடங்கி இறுதி வரையுள்ள பாடல்களில் வரிசையாகக் காணப் பெறும் புகழ்த் தொடர்களை அடியில் தந்துள்ளோம். அவை லலிதையின் எத்தனையாவது மந்திரத்தின் தமிழாக்கம் என்பதையும் குறித் துள்ளோம். இவற்றை ஆழ்ந்து பார்த்த பிறகு இவற்றிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மேலும் சில முடிவுகளை எட்டலாம். .