பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அ.ச. ஞானசம்பந்தன் 26. விரிகதிரஞ்சோதி விளக்காகியே நிற்பாய் 9-4 'உத்யத்பானு ஸஹஸ்ராபா - ல.ஸஹ. 6 28. மணி உருவினை 19-2. 'பத்மராக ஸ்மப்ரபா സെ.ണ്ഡണ്ണ, 248 29. சங்கரி - 21-3 சாங்கரி - ல.ஸஹ. 126 30. அந்தரி - 21-3 'பராகாசா - ல.ஸ்ஹ. 782 31. நீலி - 21-3 (துர்கா ச.ஸ். 190. அம்பாள் பஞ்சபூத சொரூபமாதலால் அதன் கலவையாகிய கடல் வான் போல நீல நிறம் உடையவள்) பஞ்சபூதேசி - ഓ.സെ.ഇ. 949 32. சடாமுடி - 21-3 சுபர்த்தினி ல.ஸஹ. 793 மேலே காட்டப்பெற்ற தொடர்களில் பாய்கலைப் பாவை என்பது இரண்டு இடங்களில் வருகின்றது. அன்றியும் காடுகாண் காதையில் வசந்த மாலை வடிவில் வந்த சிறு தெய்வத்தை வெருட்டக் கோவலன் பயன்படுத்தியது பாய்கலைப் பாவை மந்திரமாகும். பாய்கலைப்பாவை என்று இளங்கோ குறிப்பிடுவது கொற்றவையையாகும். சங்கப் பாடல்களில் காணப்படும் கொற்ற வைக்கும் இளங்கோவடிகள் கூறும் கொற்றவைக்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிதல் வேண்டும். காடுகிழாள் என்றும் கொற்றவை என்றும் சங்கப் பாடல்களில் வரும் தெய்வம் வன தேவதையாகப் போரில் ஈடுபடுபவர்க்கு வெற்றி வாய்ப்பு தரும் தெய்வமாகவே பேசப்படுகிறது. ஆனால் இளங்கோவடிகள் குறிக்கும் கொற்றவை உமா தேவிக்கு உரிய அனைத்து