பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. அ.ச. ஞானசம்பந்தன் மதுராபதித் தெய்வம் (அங்கற்கண்ணி), வேட்டுவ வரியில் வரும் கொற்றவை என்ற இருவரையும் பற்றி வரும் வருணனை ஒன்றாகவே இருத்தலின் உமாதேவியையே அடிகள் குறிக் கின்றார் என்பது தெளிவாகும். அப்படியானால் வேட்டுவ வரியில் வரும் கொற்றவைக்குச் சாத்தப் பெறும் புகழ் மாலைகள் லலிதா சஹஸ்ரத்தின் மொழியாக்கமாய் அமைந்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. மேலே காட்டப்பெற்றுள்ள கொற்றவையைப் பரவும் 38 தொடர்களில் சில சிந்திக்கத் தக்கவை. இரண்டு மூன்று இடங் களில் காணப்படும் பாய்கலைப் பாவை என்பது தமிழகத்தில் தோன்றி வளர்ந்த கருத்தாகும். தமிழகத்துக் கொற்றவையை லலிதையில் வரும் உமையுடன், இணைத்து ஒருவராகக் காணும் நிலை ஏற்பட்டவுடன் சில புதுமைகள் தோன்றலாயின. பாய்கலைப் பாவை கலைமானின் மேல் ஊர்பவள் என்ற கருத்து லலிதையில் இல்லை. அதேபோல இரண்டு வேறுருவில் என்று தொடங்கும் ஒன்பதாவது சிலம்புக்குறிப்பும் கானத் தெருமை என்று தொடங்கும் 26 ஆவது சிலம்புக் குறிப்பும் லலிதையில் இல்லை, இவை இரண்டும் மகிடாசுர வதத்தைக் குறிக்கும். என்ன காரணத்தாலோ இக்கதை லலிதையில் இடம்பெறவில்லை. இதன் எதிராக லலிதையில் இடம்பெறும் பண்டாசுரவதம் தமிழகத்தில் இடம்பெறவில்லை. அதே போன்று கலைமா ஊர்பவள் என்பது லலிதையில் இடம் பெறவில்லை. என்றாலும் ஆண்சிங்கத்தை வாகனமாகவுடையவள் என்ற லலிதையின் மூன்றாவது மந்திரம் அடிகளால் செங்கண் அரிமான் சினவிடை மேல் நின்றாய் என்று தமிழாக்கம் செய்யப்பெற்று இங்கே பயன்படுத்தப்படுகிறது. லலிதையில் காணப்பெறும் இத்தனை மந்திரங்கள் அடி களால் தமிழாக்கம் செய்யப்பெற்றுக் கொற்றவைப் பராவலில் இடம் பெறுகிறது என்றால் இதற்கொரு தனியான காரணம் இருத்தல் வேண்டும். っ、く