பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 35 இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் வேத வழக்கொடுபட்ட வைதீக சமயம், சிவ வழிபாட்டை அடிப்படை பாகக் கொண்ட சைவ சமயம், திருமால் வழிபாட்டை அடிப் படையாகக் கொண்ட வைணவ சமயம், சக்தி வழிபாட்டை அடிப் படையாகக் கொண்ட சாக்தம், சமணம், பெளத்தம் என்பவை தம்முள் மாறுபாடு கொண்டு கலகத்தில் நுழையாமல் சகிப்புத் தன்மையோடு இனங்கி வளர்ந்தன என்பதையறிய முடிகிறது. அதனால்தான் புத்தம் தவிர ஏனைய சமயங்கள் அனைத்தையும் போற்றிப் புகழும் முறையில் அடிகள் காப்பியஞ் செய்துள்ளார். என்றாலும் அவருடைய மனத்தைப் பற்றிக் கொண்ட சமயம் சக்தி வழிபாடோ என்று நினைக்கப் பல காரணங்கள் உள்ளன. இன்றியமையாக் காப்பியக் கூறாக உள்ள ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை போல் அல்லாமல் வேட்டுவ வரி தனித்து நிற் கின்றது. காப்பிய அமைப்பில், கட்டுக்கோப்பில் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் வேட்டுவ வரிநிற்கிறது என்பதை முன்னரே கண்டோம். அப்படியானால் இதனைப் புகுத்துவதற்கு அடி களுக்கு என்ன தேவை ஏற்பட்டது? எப்படி ஆராய்ந்தாலும் இதற்கு ஒரு தக்க காரணத்தைக் காண முடியவில்லை. தம் மனத்தை ஈர்த்த சக்தி வழிபாட்டிற்கும் சக்தியின் புகழ்பேசும் மந்திரங்கட்கும் இடந்தர வேட்டுவ வரியைப் புகுத்தினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சைவர்களும் வைணவர்களும் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள் லலிதாசகஸ்ரத்தில் உண்டு. சைவர்களுக்குப் பரமேசுவரனும் வைணவர்களுக்கு பூரீமன் நாராயணனும் தனி முதலாக எண்ணப்படுவர். இதன் எதிராக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேசுவரன் ஆகிய ஜவரையும் பிரேதங்களாக ஆக்கி அவற்றின் மேல் அமர்பவள் என்ற 249 ஆவது மந்திரமும் ஐந்து பிரம்ம சொருபங் களான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோ