பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அ.ச. ஞானசம்பந்தன் ஜாதம் என்ற ஐந்தின் வடிவாகவும் இருப்பவள் என்றும் கூறும் சாக்த சமயத்தை, சைவரும் வைணவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த அளவு செல்லா விடினும் அடிகள் அரி, அரன், பூ மேலோன் அகமலர் மேல் நின்றாய் என்று கூறுவது மேலே சொல்லிய மந்திரத்திற்கு ஒரு படி கீழே நிற்பதாகும். இம்மூவருக்கும் தொழிற்படுவதற்கு சக்தியின் உதவி தேவை. எனவேதான் அகமலர்மேல் நின்றாயால் என்று அடிகள் பாடுகிறார். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தாய்த்தெய்வ வழிபாடு மிகப் பழமையான ஒன்று. சிவ வழிபாடு எவ்வளவு தொன்மை யானதோ அவ்வளவு தொன்மையானது தாய்த் தெய்வ வழி பாடு, அதுவே கொற்றவை வழிபாடாக வளர்ந்து தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் வங்காளத்திலிருந்து வந்த சக்தி வழிபாடு அதனுடன் இணையலாயிற்று, அந்த இணைந்த நிலையில் தான் பாய்கலைப் பாவையை சிம்ம ஆசன ஈஸ்வரி யாகவும் செங்கண் அரிமான் சினவிடை மேல் நின்றவளாகவும் அடிகள் காண்கிறார். அன்றியும் மதுராபதித் தெய்வம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட உமை ஒரு பாகம் வடிவு கொண்ட தேவியைக் கொற்றவையாகவும் நீலகண்டியாகவும் ஒருங் கினைத்துக் காணமுற்படுகிறார். வங்காளத்தில் வளர்ந்த சாக்தத்தைத் தமிழகத்துச் சங்க காலத்துக் கொற்றவையோடு இணைத்து அதற்கு அங்கயற்கண்ணி என்ற புது வடிவையும் தந்தது இளங்கோவின் பெரிய சாதனையாகும். அடிகளாரின் அக மனத்தில் முகிழ்த்து எழுந்த சக்தி வழிபாட்டுக்கு மிகச் சிறந்த முறையில் சிலம்பில் இடம் தந்தது அவருடைய தனிச் சிறப்பாகும்.