பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 37 மேலே காட்டப்பெற்ற மந்திரங்கள் அனைத்தும் லலிதா சகஸ்ரத்தில் காணப்பெறும் மந்திரங்கள் என்றும் அவற்றை அடிகள் தாராளமாக எடுத்துப் பயன்படுத்துகிறார் என்றும் கண்டோம். கொற்றவைப் பராவல் என்பது அங்கயற்கண்ணி அம்மையையே என்பதையும் ஊகித்து உணர முடிகிறது. இவற் றோடு நில்லாமல் காப்பியத்தின் தொடக்கத்திலேயே அடிகள் மங்கல வாழ்த்து என்னும் பெயரில் மூன்று பாடல்களைப் பாடு கிறார். அவற்றுள் முதல் இரண்டு பாடல்களும் முறையே திங் களைப் போற்றுதும் என்றும் ஞாயிறு போற்றுதும் என்றும் தொடங்குகின்றன. சிலம்பிற்குப்பிற்பட்டுத் தோன்றிய அனைத்து நூல்களும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் ஏற்புடைக் கடவுளையோ அன்றி நூலாசிரியரின் வழிபடு கடவுளையோ வணங்கித் தொடங்குவதைக் காணலாம். சிலம்பிற்கு முற்பட்ட காப்பிய நூல் ஏதேனும் இருந்ததா என்பதை அறிந்து கொள்ள இன்று வாய்ப்பில்லை. ஆனால் சிலம்பு போன்ற ஈடுஇணையற்ற ஒர் இலக்கிய காப்பியம் (Literary Epic) இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிற்று என்றால் பல காப்பியங்கள் இதற்கு முன்ன்ர்த் தோன்றி வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. சங்கப் பாடல்கள் என்ற பெயருடன் இன்று காணப் பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் எல்லா நூல்களும் கடவுள் வாழ்த்தைப் பெற்றுத் திகழ்கின்றன. எட்டுத்தொகை என்பது உதிரிப்பாடல்களின் தொகுப்புக்களாகும் என்றாலும் அவற்றிற்குக் கூட கடவுள் வாழ்த்து என்பது இன்றியமையாதது என்று கருதிய பெருந்தேவனார் போன்ற புலவர்கள் இத்தொகுப்பிற்குக் கூட கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த் துள்ளனர். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சமணக் காப்பிய மானசிந்தாமணியும் அதற்குச் சற்று முன்போபின்போ தோன்றிய