பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அ.ச. ஞானசம்பந்தன் சூளாமணியும் அருக தேவனை வாழ்த்தி நூலைத் தொடங்கும் மரபினை மேற்கொண்டுள்ளன. இவற்றையல்லாத பிற காப் பியங்கள் அனைத்தும் கடவுள் வாழ்த்தோடுதான் தொடங்கு கின்றன. பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுங்கூட கடவுள் வாழ்த்து என்ற ஒரு முழு அதிகாரத்தையே பாடிச் செல்கிறது. அப்படியிருக்க சிலப்பதிகாரம் மட்டும் மங்கல வாழ்த்து என்ற பெயரில் திங்களையும் கதிரவனையும் போற்றிப்பாடுகிறது. தமிழ்மொழியில் மட்டுமல்லாமல் உலகிலுள்ள வேறு எந்த மொழியில் தோன்றிய காப்பியமாயினும் கடவுளையோ அன்றி ஒரு தெய்வத்தையோ போற்றி வணங்கிவிட்டு நூலைத் தொடங்குவதைக் காணலாம். மில்டனுடைய சொர்க்க நீக்கம்’ கவிதா தெய்வத்தைப் போற்றிவிட்டு நூலைத் தொடங்குகிறது. வேறு எந்த மொழியிலும் திங்களையும் கதிரவனையும் போற்றித் தொடங்கும் நூலைக் காண முடியவில்லை. மிகச் சிறந்த முறையில் சிலம்பிற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் கூட இப் புதுமையைக் கண்டதாகத் தெரியவில்லை. வேறு யாரும் எந்த நூலும் பாடாத முறையில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றி நூல் தொடங்கப்படுகிறது என்றால் அது ஏன் என்ற வினாவைத் தொடுப்பதில் தவறில்லை. இதற்குரிய உண்மையான காரணம் எது என்று அறுதியிட்டுச் சொல்வது இவ்வளவு நீண்ட காலத் திற்குப் பிறகு அரியதாகும். என்றாலும் அடிகள் அம்பிகைக்குரிய மந்திரங்கள் பலவற்றை வேட்டுவ வரியில் குறிப்பிட்டுள்ளமையால் ஒரு வேளை இத்தொடக்கமும் அது பற்றி எழுந்ததோ என்ற ஐயம் தோன்றுகிறது. திங்களைப் போற்றுதும் என்ற அடி சந்த்ர மண்டல மத்திகா'240-ஆம் மந்திரத்தையும் ஞாயிறு போற்றுதும் என்பது பானு மண்டல மத்திஸ்தா என்பது 277 ஆவது மந்திரத்தின் தமிழாக்கமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஞாயிற்றுக்கு அவன் திகிரியை உவமையாகக் கூறினாரேனும்