பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 39 இந்த உவமைக்காகத் திங்களையும் ஞாயிற்றையும் போற்றி யுள்ளார் என்பது பொருத்தமற்ற கூற்றேயாகும். எவ்வாறு ஆராய்ந்தாலும் நூலின் தொடக்கத்தில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றுவது ஏன் என்பது புரியவில்லை. அப்படியா னால் மாமழை போற்றுதும் என்ற மூன்றாவது வாழ்த்து அம்பிகையைக் குறிப்பதாகுமா என்று கேட்பதில் பயனில்லை. கூறப்பட்ட அனைத்துமே அம்பிகையைக் குறிக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. தம்முடைய கருத்தை வெட்ட வெளிச்சமாகத் தெரிவிக்காமல் உய்த்துனரும்படி பாடி இருப்பது இளங்கோவின் தனிச்சிறப்பிற்கு ஒரு காரணமாகும். இறுதியாக இளங்கோவடிகள் என்பவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பதும் அவர் தமக்கே அரசாள் உரிமை உண்டு என்று நிமித்திகன் கூறியதைப் பொய்ப்பிக்கும் முறையில் துறவு பூண்டார் என்பதும் இன்றுவரை நம்பப்பட்டு வரும் கதையாகும். குட்டுவன் என்ற பெயரில் பதிற்றுப்பத்தில் காணப்படும் கடல் பிறக்கோட்டிய செல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறு என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவ்வாறாயின் வரந்தரு காதை குறிக்கும் செங்குட்டுவன் யார்? என்ற வினா தோன்றுகிறது. இந்த கதை முழுவதற்கும் ஆதாரமாக இருப்பது வரந்தரு காதையில் காணப்படும் கீழ்வரும் தொடர்களேயாகும். வேள்விச்சாலையின் வேந்தன் போந்த பின் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகை மேற் றிகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை அரை சுவிற் றிருக்குந் திருப்பொறியுண்டென்று உரை செய்தவன்மேல்உருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட்டுவன்றன் செல்லல் நீங்கப் r