பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அ.ச. ஞானசம்பந்தன் இளங்கோவடிகளுக்கும் இந்த மன்னனுக்கும் என்ன தொடர்பு என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நூலையும் நூலாசிரியனையும் சமனராக நிறுவ முயன்ற பதிக ஆசிரியனின் கைவண்ண இடைச் செருகலாகும் இது என்பது தெளிவு. பதிகவாசிரியர் இன்னும் கொஞ்சம் சிந்தித்து இடைச் செருகல் என்று தோன்றாதவாறு இதனைச் செய்திருக்கலாம். இளங்கோவடிகளுமே அவருடைய வரலாற்றைக் கண்ணகி கூறியது போல் கூறாமல் செங்குட்டு வனிடமோ மாடல மறையவனிடமோ கண்ணகி பேசியதாகப் பாடியிருக்கலாம். அவ்வாறு பாடி இருந்தால் காப்பியப் புலவன் நான் உள்ளே சென்றேன். கண்ணகித் தெய்வம் என்னிடம் பேசிற்று. அந்தமில் இன்பமாகிய மோட்ச உலகத்தை நான் ஆளப் போகிறேன் என்றும் அத்தெய்வம் கூறிற்று' என்று பாடுகின்ற அவலநிலை ஏற்பட்டிராமல் காப்பியப் புலவனையும் காப்பாற்றி இருக்கலாம். அதே நேரத்தில் இளங்கோ பற்றிய கதையையும் நிலைநாட்டி இருக்கலாம். அது அவ்வாறு இல்லை. எனவே காப்பி யத்திற்கும் காப்பிய ஆசிரியனுக்கும் இழுக்குத் தேடும் முறையில் இந்த இடைச்செருகல் பகுதி அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் கூட இடைச் செருகலா என்று யாரும் ஐயுறத் தேவையில்லை. அழற்படு காதையில் ஐந்து இடங்களில் இடைச் செருகல் உள்ளதாக ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் ஜயர் அவர் களே குறித்து உள்ளார். அதே போல வஞ்சின மாலையில் வரும் பல கதைகள் இடைச் செருகலோ என்று ஐயுற வைக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சேரன் தம்பி இசைத்த சிலம்பில் சேரன் தம்பி என்பது எவ்வளவு தூரம் மெய்ம்மையானது என்பதும் சிலம்பு என்ற காப்பியத்தில் எந்த அளவு இடைச் செருகல்கள் புகுந்துள்ளன என்பதும் ஒரளவு விளங்கும். சமண சமயத்திற்கு ஆபத்து நிகழ்ந்த ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளிலோ அதனை அடுத்த காலத்திலோ வீழ்ச்சி யடைந்த தமது சமயத்தை நிலை நிறுத்த சிலர் முயன்றிருக்க