பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அ.ச. ஞானசம்பந்தன் என்று சிந்திக்க வேண்டும். இதை நாம் ஆராய்வதால் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று முடிவு கட்டுவதாக நினைக்க வேண்டாம். அந்த வினாக்களுக்கு முடிவு கான முடியுமா என்று பார்ப்பதுதான் நமது நோக்கமே தவிர அவர்கள் இந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் அந்தச் சமயத்தைச் சேர்ந்த வர்கள் என முடிவு கட்ட நாம் தயாராக இல்லை. அவர்கள் சமன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், ஆனால் ஒரு புதுமை, சமண சமயத்தில் இன்று வாழ்கின்ற பெருமக்கள் சிந்தா மனியை மணநூல் என்று சொல்லி பூசைக்குரியதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர சிலப்பதிகாரத்திற்கு அந்த மரியாதையை அவர்கள் தரவேயில்லை என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, இனி இளங்கோவடிகளால் பாடப்பெற்ற தலைவன், தலைவி இருவரும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நூல் பேசுகிறது என்பதை நூல் வழி சிந்திக்க வேண்டும். நூலில் கோவலன் கண்ணகி திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றார் இளங்கோவடிகள். “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை” (மங்கல வாழ்த்து 52-53) என்பது மரபு வழி நடைபெற்ற திருமணம் என்பதை அறிவிக் கிறது. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (தொல். கற்பியல் 1091) என்ற பழைய இலக்கணத்தை அடியொற்றி - மாமுது பார்ப்பான் - வயது முதிர்ந்த அந்தணன் மறைவழி காட்டிட - வேத நெறிப்படி திருமணத்தைச் செய்விக்க