பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தச் செவிவழிச் செய்தி கதைக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. சிலம்பின் ஆசிரியர் பெயர் இளங்கோ என்பதுதானா என்பதையும் உறுதியாகக் கூறச் சான்று எதுவு மில்லை அல்லாமலும், கோவலன் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லவும் எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படியிருந்தும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் பதிகத்தையும் வரந்தரு காதையின் கடைசி பன்னிரெண்டு அடிகளையும் நம்பிச்சேரன் தம்பி சிலம்பை இசைத்தான் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இக்கருத்து எவ்வளவு பொருத்தமற்றது, இளங்கோ அடிகளின் உண்மையான சமயம் யாது என்பதே முதற் கட்டுரையாகும்.

இரண்டாவது கட்டுரை, தொன்றுதொட்டு இந்நாட்டில் ஏறத்தாழ எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த வினைக்கொள்கை பற்றிச் சிலம்பு என்ன பேசுகிறது என்பதை ஆய்வதையே பொருளாகக் கொண்டது.

மூன்றாவது கட்டுரை, கண்ணகி என்ற பாத்திரத்தை அடிகள் எவ்வாறு படைக்கின்றார் என்பது பற்றிச் சிந்திப்பது.

நான்காவது கட்டுரை, இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலம்பும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணமும் பல்வேறு ஒற்றுமைகளையுடைய கண்ணகியையும், காரைக்கால் அம்மையாரையும், எங்ஙனம் படைத்துள்ளன என்பதை ஆய்கிறது.

"இளங்கோவும் திருவள்ளுவரும்" என்ற ஐந்தாவது கட்டுரை நீதி நூலாகிய குறளை எந்த அளவுக்கு அடிகள் பயன்படுத்துகிறார் என்பதை விளக்குவதாகும்.

முதல் கட்டுரை. தவிர, ஏனையவை பற்றிக் கருத்து வேற்றுமை எழ இடமில்லை. ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கையைத் தகர்க்க முற்படுவது முதற்கட்டுரை. ஆக, அதில் வலுவான கருத்து வேற்றுமை எழ இடமுண்டு. சிலப்பதிகார நூலில் காணப்படும் பாடல்கள், செய்திகள்