பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அ.ச. ஞானசம்பந்தன் அடைக்கலமாகப் பெற்ற கோவலன், கண்ணகி இருவரையும் மாதரி கவுந்தி யடிகளிடமிருந்து பிரித்து அழைத்துக் கொண்டு புறப்பட்ட நேரத்தை அடிகள் விரிவாகப் பேசுகிறார். சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்று தேர் ஆவின் கனைகுரல் இயம்ப (அடைக்கலக் காதை 203-204) 'வாயில் கழிந்து தன் மனை புக் கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென் (218-1) இவ்விரண்டு அடிகளின் பொருளைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும் சென்ற ஞாயிறு என்றமையின் கதிரவன் மறைந்துவிட்டான் என்பதையும் செல்சுடர் அமயம் என்றதால் அந்திப் பொழுது என்பதையும் ஆசிரியர் குறிக்கிறார். செல்சுடர்' என்றதால் அந்த அந்திப் பொழுதும் ஏறத்தாழ முடிகின்ற நிலை என்பதையும் ஆசிரியர் குறிக்கின்றார். இந்த நேரத்தை நன்கு புரிந்து கொள்வதற்காக அமைத்த தொடரே கன்று தேர் ஆவின்' என்பது. தம் கன்றுக் குட்டிகளை நினைத்துக் கொண்ட பசுக்கள் கத்துகின்றன (கனை குரல்) என்று கூறுவதால் அந்தி சாய்ந்த நேரத்தில் அதாவது 32 நாழிகைக்கு மேல் தான் புறஞ்சேரி யிலிருந்து கண்ணகியை அழைத்துக் கொண்டு மாதரி புறப்படு கிறாள். இதனையடுத்து மதுரைக் கோட்டையை அவள் சென்று அடைகிறாள், கோட்டை வாயிலின் உட்புகுந்து அவள் வீட்டைச் சென்று அடைய ஒரு நாழிகைப் பொழுதாவது ஆகியிருக்க வேண்டும். வீடு சென்ற பிறகு அவ்விருவரையும் குளிக்கச் செய்து சமையலுக் குரிய பாத்திரங்களைத் தந்து கண்ணகியைச் சமைக்குமாறு பணிக்கிறாள் மாதரி என்ன என்ன காய்களை நறுக்கி எவ்வாறு சமையல் செய்து எப்படி இலைபோட்டு கண்ணகி அமுது படைத்தாள் என்பதையும் அடிகள் விரிவாகப் பேசுகிறார். இந்நிலையில் குளித்தல், சமையல் செய்தல், உணவு