பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 51 உண்டல் ஆகிய மூன்று செயல்கட்கும் குறைந்தது நான்கு முதல் ஐந்து நாழிகைப் பொழுதாகியிருக்கும். எவ்வளவு விரைவாகப் பணியாற்றி இருப்பினும் 36 நாழிகைக்கு முன்னர் கோவலன் உணவு உண்டு இருக்க முடியாது என்றால் இரவு 8 மணியளவில் தான் அவன் உண்டிருக்க வேண்டும். கண்ணகி புறப்பட்ட நேரத்தை ஆசிரியர் துல்லியமாகக் கூறியமையின் சாவக நோன்பிகள் உண்னும் நேரம் அப்பொழுதே கழிந்து விட்டது என்பதை அறிய முடியும். இந்த நுணுக்கத்தையறியாத பதிக ஆசிரியர் இந்தக் கால வேறுபாட்டைச் சிந்திக்காமல் சாவக நோன்பிகள்'என்ற அடியைப் புகுத்திவிட்டார். இந்த ஒரு அடியை வைத்துக் கொண்டு கோவலனைச் சமண சமயத்தவனாக ஆக்குவதன் பொருந்தாத தன்மையை நன்கு அறியலாம். அடுத்து சமண சமயத்தின் அடிப்படைக் கொள்கை பெண் களுக்கு வீடு பேறு இல்லை என்பது பெண்கள் மோட்சம் போக வேண்டுமானால் அவர்களும் ஆண்களாகப் பிறந்து தான் வீடுபேற்றை அடைய வேண்டுமே தவிர பெண்ணாக இருந்து வீடு பேற்றை அடைய முடியாது என்பது அவர்களது அடிப்படைக் கொள்கை, - இதற்கு நேர்விரோதமாக கண்ணகி என்ற ஒரு பெண்ணை ஒரே பிறப்பில் மோட்சம் ஏற்றுகிறார் இளங்கோவடிகள். வியப்பிலும் வியப்பு. பெருவாணிகன் மடமகள் அவள், பிறந்த இடம் அப்படி. புகுந்த இடம் கேட்க வேண்டியதே இல்லை. அதைவிடப் பெரிய இடம் ஆக செல்வச் செருக்கிலே பிறந்து, செல்வச் செருக்கிலே வாழ்க்கைப்பட்டவள். அப்படிப்பட்ட ஒருத்தி எப்படி மோட்சம் போக முடியும்? இந்த வினாபலருடைய மனத்தை நெருடக் கூடிய ஒன்று தான். ஆனாலும் இளங்கோவடிகள் கண்ணகியை இந்த ஒரு