பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 55 வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கண்ணகிக்கு இருந்திருந்தால் ஒருவேளை அதற்கு உடன் பட்டிருக்கலாம். இந்தப் பிறப்பிலேயே மோட்சம் அடைய வேண்டு மென்ற குறிக்கோள் அவளுக்கு இருந்திருக்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது. பெண்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுவார்களேயானால் அது மோட்சத்திற்குத் தடை என்று அக்காலகட்டத்தில் இளங்கோ அடிகள் நம்பினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே கோவலனைப் பிரித்து, அவன் மீண்டு வந்தபோதும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ இடம் இல்லாமல் செய்கிறார் ஆசிரியர் காப்பியத்திற்குக் காலம், இடம் (Space Time) இரண்டும் மிக இன்றியமையாதவை. இருந்தும் காலப்பிரமானம் (Time Element) அடிபடுகிறது என உணர்ந்தும் இந்த மாபெரும் தவற்றைச் செய்கிறார் இளங்கோவடிகள். திடீரென்று ஒரு நாள் இரவு கண்ணகியின் வீட்டுக்கு கோவலன் வந்து சேருகிறான். வியப்பினும் வியப்பு. தன் மனையகம் மறந்து பல்லாண்டுகள் வெளியில் தங்கிவிட்ட கோவலன் இப்பொழுது எதிரே நிற்கிறான். திடீரென்று அவனைக் கண்டவுடன் செய்வது அறியாது நின்ற கண்ணகியை அழைத்து படுக்கையறைக்குச் செல்கிறான். அவள் மேனி வாடிக் கிடப்பது கண்டு வருந்தி தான் வாழ்வில் அடைந்த இக்கட்டான நிலையை ஐந்தடிகளில் கூறுகிறான் கோவலன் 'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தருமெனக்கு என்ன நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக் சிலம்புள கொண்ம்' r (கனாத்திறம் 69-83) பல்லாண்டுகள் பிரிந்து கூடிய கணவர் மனைவியர் இடை