பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அ.ச. ஞானசம்பந்தன் எவ்விதச் சலனமும் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள் கிறார் அடிகள். கோவலன் தன் மனைவியைச் சந்தித்த இடம் பள்ளியறை என்கிறார் அடிகள். (பாடமைசேக்கை - கனாத்திறம் 67), இந்த இடத்திலும் அவர்கள் உறவு புதுப்பிக்கப்படவில்லை என்பதை நாடக பாணியில் அடிகள் அறிமுகஞ் செய்கிறார். படுக்கையில் அமர்ந்த அவன் மலை போன்ற செல்வத்தை இழந்த இலம்பாடு நாணத்தை உண்டாக்குகிறது என்று கூறுகிறான். இவனுடைய மனநிலையைப் புரிந்தோ புரியாமலோ முறுவலோடு நகைமுகங் காட்டி சிலம்புள கொண்ம்' என்கிறாள் கண்ணகி. சாதாரண நிலையில் இச்சிலம்பு முதலாக மாட மதுரை அகத்துச் சென்று உலந்த பொருள் ஈட்ட முடிவு செய்து விட்டேன். (கனாத்திறம் 75, 76), காலையில் செல்லலாம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறாயின் அன்றிரவு அவர்கள் இருவரும் ஒன்றாய் இருந்தனர் என்று கொள்ள நேரிடும். அதற்கு இடங்கொடாமல் ஏடலர் கோதாய் எழுக இங்கு என்னோடு' என்று கூறி அந்த வினாடியே அதாவது பொழுது விடியும் முன்னரே (கனைசுடர் கால்சியா முன் - கனாத்திறம் 79) புறப்பட்டுவிட்டான் என்று கூறுகிறார் அடிகள் இடையே காட்டுவழியில் செல்லும் போதுங்கூட இவர்கள் உறவு கொள்ளாது இருக்க கவுந்தியடிகள் என்ற சமணத் துறவியை இவர்களுடன் சேர்த்துவிடுகிறார் அடிகள், அடுத்து மாதரி வருகிறாள். கவுந்தியடிகள் மாதரி இடத்தில் இடைக்குல மடந்தைக் கடைக்கலம் தந்தேன்’ (அடைக்கலம் - 130) என்று கூறி கண்ணகியையும் கோவலனையும் மாதரியிடம் ஒப்படைக்கிறார். r அப்படி ஒப்படைக்கும் நேரம் கன்று தேராவின் கனை குரல் இயம்பும் அந்த மாலை சாய்ந்த நேரம் என்று முன்னரே அடிகள் குறிப்பிட்டுள்ளார். -