பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அ.ச. ஞானசம்பந்தன் காப்பியக் கட்டுக்கோப்பில் காலப் பிரமானம் (Time Element) எவ்வளவு அடிபடுகிறது என்பதை அடிகள் அறியாதவரல்லர். இரவு எட்டு மணிக்கு மேல் இரவுக் கடை வீதியில் பொற் கொல்லனைச் சந்தித்தல், பொற் கொல்லன் அரசனைச் சந்தித்தல், கள்வனைக் கொல்ல அரசன் ஆணையிடுதல், கொலை நடைபெறுதல் ஆகிய அனைத்தும் பொழுது விடி வதற்குள் நடைபெற்று முடிந்துவிடுகின்றன. ஆயர்பாடியில் நிகழும் உற்பாதங்கள், ஆய்ச்சியர் குரவையாடுதல், கோவலன் கொலை பற்றிய செய்தி பரவுதல், கண்ணகி கதறிக் கொண்டு கணவன் இறந்த இடத்திற்குச் செல்லுதல் ஆகிய அனைத்தும் நடைபெற அடுத்த நாள் பகற் பொழுதில் பெரும்பகுதி செலவாகி விட்டது. கணவன் உடலைக் கண்ணகி பார்க்கும் நேரம் மாலை நேரமென அடிகளே குறிப்பிடுகிறார். - வண்டா ரிருங்குஞ்சி மாலைதன் வார் குழன்மேற் கொண்டாள் தழிஇக் கொழு நன்பாற் காலைவாய்; புண்டாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் (ஊர் சூழ்வரி 35 - 38) இந்த நான்கு அடிகளில் காலக்கணக்கு எங்ஙனம் அடி படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும், காலையில் மலர் மாலை அணிந்த கூந்தலோடு கூடிய கண்ணகி கணவன் தன்னை தழுவி மகிழ்தலைக் கண்டாள். மாலை நேரத்தில் இரண்டு துண்டாகக் கிடக்கின்ற அவன் உடலைக் கண்டாள். ஆனால் அவன் தன்னைக் காணமுடியாத நிலையில் இருப்பதனையும் கண்டாள். இளங்கோவின் கணக்குப்படி முதல் நாள் மாலை ஆறரை மணியளவில் புறஞ்சேரியை விட்டுக் கணவனும் மனைவியும் வருகின்றனர். அன்றிரவு எட்டு மணிக்கு சிலம்புவிற்கப் புறப்படு