பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அ.ச. ஞானசம்பந்தன் வேண்டிய துறவி பெருஞ்சினம் கொள்கிறார். ஆனால் இல்லற வrசியாகிய கண்ணகியோ நெறியி னிங்கியோர் நீரல கூறினும் அறியா மையென் றறியல் வேண்டும் செய்தவத் தீர்துந் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் கால முரையி ரோவென (நாடுகாண்காதை 237-40) என்ற பேசுகிறாள். கீழ்மக்கள் கீழ்மையான பேச்சுக்கள் பேசுவது இயல்பு. அவ்வாறு பேசுவதற்குக் காரணம் அவர்களது அறியாமையேயாகும். இவர்களை மன்னித்து அருள்க என் கிறாள் கண்ணகி தன்னை அவமானப்படுத்தியவர்களைக் கூட அன்புடன் நோக்கும் சம நோக்குப் பெற்றுவிடுகிறாள் என்பதை எடுத்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள். இதனால் வீடுபேறு அடைவதற்குரிய சமநோக்கு அவள் பால் அமைந்துவிட்டது என்பதை அறிய வைக்கின்றார். கணவனோடு கூட்டமின்மை மட்டும் வீடுபேறு அடைய வழியாக அமைந்து விடுவதில்லை. மனவடக்கம், புலனடக்கம், அறுவகைக் குற்றமின்மை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து அவற்றுடன் மெய்யுணர்வும் சேரும்பொழுது அந்த ஆத்மா ஆனாயினும் சரி பெண்ணாயினும் சரி, வீடுபேற்றை அடையத் தகுதியுடையதாகிறது. அந்த அடிப்படையில் தான் கண்ணகி வரலாற்றைப் படைக்கிறார் அடிகள். கதைப்போக்கு முழு வதையும் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு கண்ணகியோ கோவலனோ சமண சமயத்தைச் சேர்ந்தவரல்லர் என்பது நன்கு தெளிவாகிறது. முதற்பகுதியில், அடிகளின் நூல் முழுவதையும் எடுத்து ஆய்ந்து அவர் வேறு எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் உறுதியாகச் சமணர் அல்லர் என்பதை எடுத்துக்