பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ கண்ட ஊழ் சிலப்பதிகாரக் காப்பியத்தில் ஊழ் எனப்படும் விதி, தகுந்த ஒர் இடத்தைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் பதிகத்தில் கூறியுள்ளபடி ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதைக் காட்டுவதற்காக இக்காப்பியம் தோன்றிற்று என்று கூறுதல் காப்பிய இலக்கணம் அறியாதார் கூற்றேயாகும். ஆசிரியரே மூன்று காரணங்களை அடுக்கி சூழ்வினைச் சிலம்பு காரணமாக நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்’ (பதிகம்)-என்று கூறியுள்ளாரே என்ற ஐயம் எழுந்தால் அதற்கு விடை இறுத்தல் எளிதாகும். அதற்குரிய விடை பதிகத்திற்கும் இளங்கோவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதேயாகும். காப்பியத்தை நன்கு கற்ற பிற்காலப் புலவர் ஒருவர் இக் காப்பியத்தில் அறியக் கிடக்கும் இம் மூன்று உண்மைகளையும் அடுக்கி இவ்வாறு பதிகம் என்ற பெயரில் இதனைப் புனைந்திருத்தல் வேண்டும். ஆனால் காட்சிக் காதையில் தண் தமிழ் ஆசான் சாத்தன்” (66) எனவரும் அடியும் சிந்திக்கற்பாலது. சிலம்பும், மணிமேகலையும் ஏறத்தாழ ஒரே காலத்துத் தோன்றியவை என்ற கதையும், இவற்றை இயற்றிய இருபெரும் புலவரும் சமகாலத்தவர் என்ற கதையும் பெரிதும் ஆராயப்பட வேண்டியவை. இக் கட்டுரையாளரைப் பொறுத்தவரை இவ்விரண்டு காப்பியங் கட்கும் இடைவெளி 200 ஆண்டுகளாவது இருக்கும் என்பதே முடிவு.