பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அ.ச. ஞானசம்பந்தன் குறைவு நிறைவுகளைத் தீரத் தெளியாமல் உடனே செயற்படுத்த முனைந்துவிட்டான். சிலம்பைக் கண்டவுடன் "சேயிழை கேள் இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் மாடமதுரை அகத்துச் சென்று என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுக” (கனா. உரை. கா. 75–79) என்று கூறினான் ஆய்ந்து ஒய்ந்து பாராமல் இம்முடிவுக்கு வந்தான்; வந்தவன் கண்ணகியையும் உடன் வருமாறு செய்துவிட்டான்; இவை அனைத்தையும்விட அன்று விடியற்காலமே புறப்பட்டும் விட்டான். இதனைக் கூறவந்த ஆசிரியர் "வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சியாமுன்” (கனா. உரை. கா 79) என்று பேசுகிறார். அடுத்து பாண்டியன் பொற்கொல்லனிடம் பேசுகின்ற நேரத்தில் ஆசிரியர் விதியைத் துணைக்கு அழைக்கிறார். ஒருவன் திருடிவிட்டான் என்று மற்றொருவன் கூறினவுடன். திருடன் எனக் குற்றம் சாட்டப்பெற்றவனை விசாரிக்காமல் அவனுக்குக் கொலைத் தண்டனை வழங்கிவிட்டான் பொற்கைப் பாண்டியன் மரபில் வந்த மற்றோர் பாண்டியன், இந்நிலையில் அடிகள்