பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 69 இதன் எதிராக மாதவியின் மன நிலையில் எவ்விதக் குழப்பமும் இல்லை. எனவே அவள் பாடல் சுருதியுடன் கலந்து அமிழ்த தாரையாக வெளிப்பட்டதாம். அந்த இனிய இசையைக் கேட்ட பூமிதேவி வியந்தாளாம்; உலகில் வாழும் பிறர் மனம் மகிழ்ந்தார்களாம். யாழையும் அவளுடைய தொண்டையையும் வேறுபடுத்திக் காணமுடியவில்லை என்பதை ஆசிரியர் கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடினாள்' (கா.வரி - 24) எனக் கூறுகிறார். இருவரும் ஒப்பற்ற இசைவாணர் ஆயினும் அன்றைப் பொழுதில் இருவருடைய பாடும் வகையிலும் இருந்த வேறு பாட்டைக் காட்டுவதன் மூலம் இருவருடைய மனநிலையையும் ஆசிரியர் தெளிவாக்கிக் காட்டிவிடுகிறார். மாதவியின் பாடலைக் கேட்டுக் கோவலன் மனம் மாறு பட்டான். ஆனால் அந்த மாறுபாடு தெளிந்த மனநிலையில் அறிவு பூர்வமாக ஆராய்ந்து செய்யப்பெற்ற முடியன்று கலங்கிய மனத் துடன் திடீரென்று செய்யப் பெற்ற முடியாகும். கோவலன் பண் பாடு மிக்கவன், கடகளிறு அடக்கிய கருனை மறவன்; (அடை. 53) யாரோ ஒருவர் குடும்பத்தைப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் (அடை. 90) கல்வி அறிவும் கலைஞானமும் இசை அறிவும் நிரம்பப் பெற்றவன். கவுந்தி அடிகளாகிய துறவிகூடத்தம் நிலை மறந்து உறையூர்க் காட்டில் கயவர் இருவரைப் பார்த்துச் சினங்கொண்டு சபிக்கத் தொடங்கியபொழுதுகூட அவர்களிடம் சினம் கொள்ளாமல், 'நெறியின் நீங்கியோர் நீரல் கூறினும், அறியாமை என்று அறியல் வேண்டும் செய்தவத்திர் நாடு கா. 237-239) என்று கூறும் பண்பாட்டினன் கோவலனாவான். அவனை மதுரை செல்லும் வழியிற் கண்ட மாடல மறையோன் 'இம்மைச் செய்தன யான் அறி. நல்வினை’ (அடை கா. 91) என்று கூறுகிறான்.