பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அ.ச. ஞானசம்பந்தன் இந்த அடிப்படையில்தான் நாம் கோவலனையும் அவனுடைய செயல்களையும் எடைபோட வேண்டும். கோவலன் மாதவியிடம் கொண்டிருந்த உறவை யாரும் குறை கூறவில்லை. ஏன்? அன்றைய சமுதாயத்தில் அதனை யாரும் தவறு எனக் கருதிலர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கணத்தில் கூட மருதத் தினை என்ற ஒன்றை ஏற்படுத்தி அதில் காதற் பரத்தை, இல் பரத்தை, சேரிப் பரத்தை என்ற நுண்மையான பிரிவுகளை ஏற்படுத்திக் கணித்த இத் தமிழ்ப் பெருமக்கள் கோவலன் வாழ்வில் எவ்வாறு தவறு காணமுடியும்? மாதவியிடம் கோவலன் சென்றதில் தவறு காணவில்லை. இச் சமுதாயம். ஆனால் தன் மனையை அறவே மறந்துவிட்டு மாதவியுடன் அவன் வாழ்ந்தது தான் தவறு என்று கருதிற்று. இவற்றைக் கொண்டு கோவலனுடைய பண்பு நலன்களை ஆராயப்புகுந்தால் அவன் அனைத்துப் பண்புகளும் ஒருங்கே நிரம்பப் பெற்ற சான்றோன் என்று கூறத்தடை இல்லை. இத்தகை யவன் மாதவியுடன் பல்லாண்டுக் காலம் வாழ்ந்தான்; அவளிடம் ஒர் அற்புதமான பெண்மகளைப் பெற்றான். அவள் குலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே அக் குழவிக்கும் இட்டான். இந்த நிலையில் மாதவியைப் பற்றியோ அவள் பண்பு நலன்கள் பற்றியோ, அவளுடைய குலம் பற்றியோ, அவளுடைய விருப்பு வெறுப்புக்கள் பற்றியோ அவள் பாடிய கானல்வரிப் பாடலின் மூலம் புதிதாக இவன் அறிந்துகொள்ளக்கூடிய பகுதி எதுவும் இல்லையே அப்படி இருக்கத் திடீரென்று யாரும் எதிர்பாரா வகையில் கொடுஞ்சொற்களை அள்ளிவீசுகிறானே? 'கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல்மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்” (கா. வரி 52)