பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அ.ச. ஞானசம்பந்தன் மனக்கண் முன் கொண்டுவருகிறார் அடிகள், மாதவியைப் பார்த்தா இவ்வாறு பேசினான் என்ற வியப்பு ஒருபுறம்! கோவலனா இவ்வாறு பேசினான் என்ற மலைப்பு ஒருபுறம் இவை இரண்டையும் அவருடைய அறிவு ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் நடந்தது உண்மை! எனவே இதற்குரிய காரணத்தை அடிகள் ஆராய்ந்து பார்க்கிறார் எத்துணைத் துரம் தன் அறிவைச் செலுத்தினாலும் இதற்குச் சமாதானம் கூற முடியவில்லை. எனவேதான் விதியைத் துணைக்கு அழைக்கிறார். யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை உறுத்தது. எனவே தான் அந்த நேரத்தில் அவ்வாறு பேசினான் என்கிறார். மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்'என்ற மாதவி பற்றிய கணிப்பு அறிவுகொண்டு ஆராயும் பொழுது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆனால் திடீரென்று இப்படியோர் எண்ணம் கோவலன் மனத்தில் தோன்றியது என்னவோ உண்மை. இதற்கு என்ன காரணத்தைக் காட்டுவது? எனவே அடிகள் ஒரு சம்பந்தமும் இல்லாத யாழிசையை நுழைவாயிலாகக் கொண்டு ஊழ்வினை கோவலனுடைய வாழ்க்கையில் புகுந்து இத்தகைய ஒர் எண்ணத்தை அவன் ஆழ்மனத்திலும் புறமனத்திலும் உண்டாக்கி விட்டது என்று கூறுகிறார். பதிக ஆசிரியர் கூறுவதுபோல, சிலம்பை நுழைவாயிலாகக் கொண்டு ஊழ்புகுந்தது என்பது அவ்வளவு பொருத்தமுடையது அன்று. காப்பியத்தை ஆழ்ந்து கற்பார்க்கு, ஊழ்வினை யாழிசையை நுழைவாயிலாகக் கொண்டு புகுந்தது. புகுந்த தோடல்லாமல், மின்னல் வேகத்தில் பணிபுரியத் தொடங்கிற்று. இங்கே உட்புகுந்த ஊழ், கோவலனை எழுதும் என அவளை உடன்கூட்டிக் கொண்டு செல்ல வொட்டாமல் தடுத்தது. நேரே கண்ணகியின் வீட்டிற்கு அவனை அனுப்பிற்று. சிலம்பை காட்டு மாறு அவளைச் செய்தது. மதுரைக்குச் செல்லவேண்டும் என்ற