பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 73 எண்ணத்தை அவனுக்குள் தோற்றுவித்தது. மதுரை சென்ற அன்று இரவே, சிலம்பை விற்கத் தூண்டிற்று நின்சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான்போய் மாறி வருவன், மயங்காது ஒழிக"(கொலை கா. 93) என்று அவனைச் சொல்லச் செய்தது. இரவென்றும் பாராமல் பெருமதிப்புள்ள சிலம்பைக் கொண்டு சென்று விற்கத் துரண்டியது. பொற்கொல்லனை எதிரே வரச் செய்தது. பொற்கொல்லன் உடன் வந்த காவலாளருள் ஒருவன், "வெள்வாள் எறிந்தனன், விலங்கூடு அறுத்தது” (கொலை -213). கோவலன் கதை முடிந்தது எழுதும் என்று கூற வேண்டிய இடத்தில் கூறாமல் புறப்பட்டான். தான் கள்வன் அல்லன் என்று கூற வேண்டிய இடத்திலும் கூறாமலே வெட்டுண்டான், இவ்வளவு விரைவாகக் கோவலனுடைய வாழ்க்கையை முடிக்க வந்த ஊழ் கொடுமை நிறைந்த அந்த ஊழ், கோவலன் வாழ்க்கையில் எவ்வித முன்னறிவிப்பும் படாடோபமும் இல்லா மலே துழைந்து விட்டது. முன்னர் பின்னர் நிகழாத ஒரு புதிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பயனாக, கோவலன் வாழ்க்கையில் இம்மாபெரும் மாறுதல் ஏற்பட்டது என்று சொல்வதற்குக் கூட வழியில்லை. அதுதான் கொடுமையிலும் கொடுமை, கோவலன் மாதவி என்ற இருவருமே மாபெரும் இசைக் கலைஞர்கள். அவர்கள் வாழ்வு முழுவதும் இசையும் சுருதியும் போல இனைந்தே இருந்தது. இரவுபகல் எந்நேரத்திலும் இசை யிலேயே தம் வாழ்நாளைக் கழித்த அவ்விருவர் வாழ்க்கையிலும் அந்த இசையே எமனாகப் புகுந்தது அதிர்ச்சிதரும் விஷயமாகும். ஆனாலும் நடந்தது என்னவோ அதுதான். கோவலனுடைய இந்த மன மாற்றத்திற்கு வேறு காரணமே கூறுமுடியாத நிலையில் அடிகள் ஊழ்வினையைத் துணைக்கு அழைக்கிறார். அறிவினால் ஆராய்ந்து விடை காணமுடியாத பொழுது மட்டுமே அதற்கு ஊழ் என்று பெயரிட்டனர் நம் முன்னோர்.