பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அ.ச. ஞானசம்பந்தன் மற்றொன்று சூழினும் தான் முந்துறும் என்ற சொற்களால் ஊழின் வருகையை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பதின்மூன்று ஆண்டுகளாக நாள் தோறும் பயிலப்பட்ட யாழிசையில் இவர்கள் இருவர் இடையே எத்தனை முறை போட்டிகள் நடந்திருக்கும்? கற்பனா சுரங்கள் வாசிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் யாழ் வாசித்து இருக்க வேண்டும். அதுபோல்தானே இன்றும் நடைபெற்றது. அவன் ஒரு வரிப்பாடலைப் பாடினான். அதில் ஒரு குறிப்பு இருப்பதாகக் கருதினாள் அவள். எனவே அதற்குப் போட்டியாகத் தானும் ஒர் குறிப்பை வைத்து யாழ் வாசித்துப் பாடினாள். இரண்டுபேரும் சிரித்து மகிழ்ந்திருக்க வேண்டிய நேரம், உன் பாடலுக்கு என் பாடல் தோற்கவில்லை என்று கூறி, சிரித்து இருக்கவேண்டிய நேரம் எவ்வளவு எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இன்றி, பல்லாண்டு பழகிய யாழிசையையே தனக்குக் கருவியாகக் கொண்டு ஊழ்வினை புகுந்த கொடுமையைக் காண்கிறோம். ஒரு கையினால் சப்தம் உண்டாக்க முடியாது. இரண்டு கைகள் ஒன்றுடன் ஒன்று மோதினால்தான் சப்தம் உண்டாகும் என்று கூறுவர். யாழ் இசை மேல் வைத்து கோவலன் வாழ்க்கையில் புகுந்த ஊழ் சப்தம் உண்டாக்க வேண்டுமானால் மற்றொருவர் வாழ்க்கையிலும் புகவேண்டும். பண்புடைய கோவலன் வாழ்க்கையில் புகுந்த ஊழ், அவனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வழக்கமாக அவன் மாதவியிடம் சொல்லும் ஒரு சொல்லைச் சொல்லாமல் செய்துவிட்டது. கானல் வரி முடிந்த வுடன் எவ்வளவு கோபமாக இருப்பினும் எழுதும் என்று கூறி யிருப்பானேயானால் மாதவியும் உடன் சென்றிருப்பாள், வரலாறு வேறுவிதமாகச் சென்றிருக்கும் எழுதும் என்று சொல்ல வேண்டிய இடத்தில் அவன் வாயை அடைத்து, சொல்லாமல் செய்த ஊழ் தேவையில்லாத மற்றோர் இடத்தில் இதே சொல்லை