பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அ.ச. ஞானசம்பந்தன் தாண்டியறியாத ஒருத்தியை, தான்கூட முன்பின் பார்த்திராத ஊருக்கு உடன் அழைத்துச் செல்பவன் பைத்தியக்காரனாகத் தான் இருத்தல் வேண்டும். ஏன் இவ்வாறு செய்தான் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தாலும் விடை காண முடியவில்லை. எனவேதான் அடிகள் அறிவின் துணைகொண்டு விடுவிக்க முடியாத இந்தப் புதிரை விளக்குவதற்கு விதியைத் துணைக்கு அழைக்கின்றார். அவன் பெயரில் எவ்விதக் குற்றமும் கூறமுடிய வில்லை. மிக நீண்டதாகிய ஒரு முன்னேற்பாட்டுடன் வினை அவர்களை முன்னர் நின்று அழைத்த காரணத்தால் சூரியன் உதயமாவதற்கு முன்னரே புகாரைவிட்டு மனைவியுடன் புறப் பட்டுவிட்டான் என்று கூறுகிறார் ஆசிரியர் - “நீடிய வினை கடைக்கூட்ட வியங் கொண்டான் -கங்குல் கனைசுடர் கால் சீயா முன்” (கனா. கா. 79-80) இதனை வினைநீடிக் கடைக்கூட்ட' என்றும் நீடி'என்ற வினை யெச்சத்தை நீடிய' என்ற பெயரெச்சமாக மாற்றி நீடிய வினை கடைக்கூட்ட' என்றும் பொருள் கொள்ளலாம். இனி மூன்றாவதாக அடிகள் ஊழை அழைக்கின்ற இடம் பாண்டியன் கள்வனைக் கொன்று அச் சிலம்பைக் கொணர்க’ என்று கூறிய பொழுதாகும். - அரசியின் அந்தப்புரஞ் செல்லும் அரசனைக் கண்டு பொற்கொல்லன் கோயில் சிலம்பு கொண்ட கள்வன். என்சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன்'(கொலைகா 145) என்றான். உடனே மன்னவன் “ஊர் காப்பாளரைக் கூவி, ஈங்கு என் தாழ்பூங் கோதைதன் கால் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச் சிலம்பு கொண்ர்க ஈங்குஎன” (கொலை 148)