பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 79 ஆணையிட்டுவிட்டான். ஒரு திருடன் தேவியின் சிலம்பைத் திருடமுடியுமா என்பதையும், அப்படியே திருடி இருப்பினும் அரசனுடைய தலைமைப் பொற்கொல்லன் வீட்டில் சென்று தங்குவானா என்பதையும் சாதாரனப் பகுத்தறிவு உடையவன் கூடச் சிந்தித்துப் பார்ப்பானே! அப்படி இருக்க ஒரு பேரரசன் இவ்வாறு செய்யலாமா என்ற எண்ணம் நம் மனத்திலும் தோன்றுகிறது எனின் அடிகட்கு அது தோன்றாமல் இருந் திருக்குமா? தோன்றினால் என்ன விடை கூறமுடியும்? அறிவினால் எத்துணைத் தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் பாண்டியனுடைய இந்தச் செயலுக்கு விடையோ சமாதானமோ கூற முடியாதுதான். எனவேதான் அடிகள் இத்தகைய சந்தர்ப் பத்தில் வழக்கமாகக் கூப்பிடும் ஊழைத் துணைக்கு அழைக் கின்றார். "வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி Poliss 5ss Lillis fifs fols .......-----, ........... கன்றிய கள்வன் கையது ஆகில்....... 07:42, 26 பெப்ரவரி 2016 (UTC)~~; TamilBOT (பேச்சு) 07:42, 26 பெப்ரவரி 2016 (UTC) ஈங்குஎண்க காவலன ஏவ (கொலை 148-154) என்பன காப்பிய வரிகள், ஆனாலும் ஒரு பெரிய உண்மையையும் இவ்வரிகளில் அடிகள் அறிவிக்கின்றார். மழைக்கால இருட்டாக இருப்பினும் மந்தி கொம்புவிட்டுக் கொம்பு தாவாது” என்பது இந் நாட்டு முதுமொழி. எனவே எவ்வளவு விதியின் சூழ்ச்சி இருப்பினும் பாண்டியன் பெரிய தவற்றைச் செய்துவிடவில்லை என்கிறார் ஆசிரியர் கள்வரை விசாரிப்பதும் களவாடப்பட்ட பொருள் அவன்பால் உள்ளதா என்று ஆராய்வதும் அரசனுடைய அன்றாட அலுவல் களல்ல. அவற்றைச் செய்ய நீதி மன்றங்களும், ஊர்க் காவற்