பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அ.ச. ஞானசம்பந்தன் படைகளும் உள. ஆனால் அரசனுடைய கடமை யாது? இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்” (குறள் 517) என நீதி நூல் கூறுகிறது. திடீரென்று கோவலனைக் கொல்க என அரசன் கட்டள்ை இடவில்லை. "தேவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச் சிலம்பைக் கொணர்க” என்றுதான் கட்டளை இட்டான். இக் கட்டளை முறையானதுதான் எனினும் கள்வன் கையில் இருப்பது யாருடைய சிலம்பு? அது தேவியின் சிலம்பு தானா என்பதைப் பரிசோதித்து உண்மையை அறியவேண்டிய பொறுப்பைத் தக்கார் ஒருவரிடம் ஒப்படைக்காமல் ஊர்க் காப் பாளரிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்ததுதான் அவன் செய்த பிழை. எனவே அதனை நன்கு இயற்ற வகையற்ற ஊர்க் காப்பாளர் பொற்கொல்லன் சொல்லையே வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுவிடப் பாண்டியன் வழி செய்துவிட்டான். இதுதான் அவன் செய்த பிழை. பொற்கைப் பாண்டியன் மரபில் வந்தவன் இத்தகைய பிழையைச் செய்யக் காரணமாக அமைந்தது ஊழ் என்கிறார் அடிகள், "வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினைஅலர் வேம்பன் தேரானாகி......” வினை விளைகாலம் என்ற ஆட்சி அற்புதமாக அமைக்கப் பெற்றுள்ளது. விளைகாலம்' என்ற வினைத் தொகை, பாண்டியன், கோப்பெருந்தேவி, கண்ணகி, மாதவி, மணி மேகலை முதலியவர்களைப் பொறுத்தமட்டில், வினை இனி விளையப்போகின்ற காலமாகவும் ', கோவலனைப் பொறுத்த மட்டில் “விளைந்துவிட்ட காலமாகவும்” பொருள் தந்து நிற்றலைக் காணலாம். இந்த அழகை நாம் கவனியாமல் விட்டு விடுவோமோ என்று கருதிய ஆசிரியர் அடுத்த அடியில், 'தீவினை முதிர்வலைச் சென்று பட்டிருந்த - கோவலன் தன்னை ....... 33 (கொலை. கா. 156)