பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 81 என்று விவரிக்கின்றார். எனவே பாண்டியனுக்கு வினை விளைவதற்கு முன்பேகடிடக் கோவலனுக்கு அது விளைந்து முதிர்ந்து பயன்தரும் நிலையில் இருந்தது என்பதையும் நாம் உணரவைக்கின்றார். இதனால் ஒருவனுக்கு ஏற்படும் முடிவுக்கு மற்றவன் வினை நேரடிக் காரணமாகத் தேவை இல்லை. இவ்வாறு கூறுவதில் ஆழ்ந்த கருத்தும் ஒன்றுண்டு. பாண்டியன் தவறிழைக்காவிடினும் கோவலன் தன் தீவினையின் பயனை அனுபவிக்க வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டான். பாண்டியன் நிமித்த காரணமாக அமைந்துவிட்டானே தவிர அவன் இன்றியும் கோவலன் தன் வினையை அனுபவித்தே இருப்பான். அன்றியும் கன்றிய கள்வன் கையது ஆகில்.” என்று அரசன் ஆணை இட்டிருத்தலின் கோவலன் கையி விருந்தது அரசியினுடையதா, அன்றா என்பதை அறிய வேண்டிய பொறுப்பு ஊர்க்காவலரையும், பொற்கொல்லனையும் சேர்ந்ததாகிவிட்டது. அவர்கள் தத்தம் கடமையிலிருந்து வழுவினால் அதற்கு அரசனை முழுப் பொறுப்பாக ஆக்கவும் முடியாது. தக்கவர்களைத் தேடிக் கடமையை ஒப்படைக்காத சிறு தவறே அரசன் செய்தான். அது கருதியே இறுதியில் கண்ணகிப் பெருமாட்டி விண்ணிடைத் தோன்றித் ‘தென்னவன் தீதிலன் தேவர்கோன்தன் கோயில் நல்விருந்து ஆயினான்; நான் அவன்தன் மகள்" (வாழ்த்து 10) என்று கூற முடிந்தது. இந்தச் சிறு பிழையை மன்னவன் செய்ததற்கும் காரணம் வினையே என்றும் அந்த வினைதானும், கோவலனைப் பற்றி அவனைக் கொல்வித்தற்குப் பாண்டியனை ஒரு கருவியாகவே கொண்டது என்றும் அடிகள் நம்மை உய்த் துணர வைக்கின்றார். - இந்த அளவில் பாண்டியனை எளிதாக நாம் விடுவிப்பதானால் வினை விளைகாலம் என்று அவனுக்கு அடைமொழிகளை 6